Saturday, February 20, 2010

The Wolfman (2010)

Your Ad Here

ஏதோ கடவுள் புண்ணியத்தில் இப்போது சில ஹொலிவூட் திரைப்படங்கள் வெளியாகி சில நாட்களிளோ வாரங்களிலோ இலங்கையிலும் வெளியாகத் தொடங்கியிருக்கின்றது. பெருமளவில் திரைப்படங்கள் வெளியாவதில்லை என்றாலும் ஓரளவு எதிர்பார்ப்புள்ள பேசப்படும் திரைப்படங்களை வெளியிடத் தொடங்கியுள்ளார்கள். அந்தவகையில் இன்று கொழும்பு மஜெஸ்டிக் சினிமாவில் பார்த்து களித்த திரைப்படம்தான் இந்த The Wolfman. 1930 கள் மற்றும் 40 துகளில் யூனிவர்சல் சூடூடியோ காரர்கள் பல திகில் திரைப்படங்களை எடுத்து தள்ளினார்கள். அவ்வப்போது அந்த திரைப்படங்களை இக்காலத்திற்கேற்றவாறு மீளாக்கம் செய்து வருகின்றார்கள் இதற்கு உதாரணமாக மம்மி போன்ற திரைப்படங்களைக் கூறலாம். The wolfman திரைப்படம் முறையே 1966 மற்றும் 1941இல் அமெரிக்காவில் வெளியாகி இருந்தாலும் மீள 2010ல் திரைப்படம் மீளாக்கம் செய்யப்பட்டு யூனிவர்சல் ஸ்டூடியோவால் வெளியிடப்பட்டுள்ளது.



கதைக் களம் 1890ல் நடப்பதாக காட்டப்பட்டுள்ளது. ஏதோ ஒருவகை மிருகத்தினால் தம்பி கொலை செய்யபட்ட கதையைக் கேட்டு இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா திரும்புகின்றார் அண்ணன் லோரன்ஸ். மீள வீடு திரும்பும் மகனை வரவேற்கின்றார் ஒரு மாதிரியான போக்குடை தந்தையார் (Anthony Hopkins).

தம்பி கொலையில் ஈடுபட்ட மிருகம் பற்றிய துப்புத் துலக்கலில் ஈடு படப்போய் கடைசியில் ஓநாய் உருவுடைய மிருகத்தினால் கடிபடுகின்றார் நம்ம நாயகன். இவ்வாறாக ஒநாய் உருவுடைய மிருகத்தினால் கடிபட்டால் என்னவாகும் என்பது நாங்கள் அறிந்ததுதானே. அடுத்த பௌர்ணமியில் அவரும் ஒநாயாக மாறுவார்.

ஓநாய் பிடிக்கப்போனவர் கடைசில் ஒநாயாகி மனிதவேட்டை நடத்துகின்றார். பின்னர் பொலிசார் இவரை மடக்கிப் பிடிக்கின்றனர்.

ஒரு ஓநாய் மனிதன் இந்ந லோரண்ஸ் மற்ற ஒநாய் மனிதன் யார் எனபதே கதை. அந்த ஒநாயை பழிவாங்குகின்றாரா நம்ம நாயகன் என்பது மிகுதிக் கதை.

லோரண்ஸாக போட்டரிக்கா நாட்டு நடிகர் Benicio Del Toro நடிக்கின்றார். நடிப்பு என்று பெரிதாக அவர் கிழிக்கவில்லை ஆனால் அவர் அந்த ஒநாய் பாத்திரத்திற்கு அப்படியே நச்சென்று பொருந்துகின்றார். ஆனால் மறுபக்கத்தில் அந்தனி ஹோப்கிங்ஸ் தனக்கு வழங்கப்பட்ட நேரத்தில் பிய்த்து உதறுகின்றார். ஏற்கனவே இவரின் ஹனிபல் திரைப்படம் பார்த்திருந்தால் தெரியும் அண்ணர் எப்படியான வில்லதனமான வில்லங்க நடிகர் என்பது.

நிச்சயமாக இந்த திரைப்படம் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை ஆயினும் அசல் பார்ப்பதைவிட நம்பி திரையரங்கு சென்று பார்க்கலாம்.

My Rating: 50/100
IMDB Rating: 66/100

லேபிள்கள்: ,

Monday, February 15, 2010

Yes Man (2008) விமர்சனம்

Your Ad Here

நடிகர் ஜிம் காரியின் திரைப்படங்களை நம்மில் பலரும் பார்த்து இரசித்திருப்போம். குறிப்பாக The Mask போன்ற திரைப்படங்களை மறநிதிருக்க வாய்ப்பேயில்லை. அவரின் ஒரு திரைப்படமே இந்த யெஸ் மான் எனும் திரைப்படம். விவாகரத்துப் பெற்று வாழ்க்கை வெறுத்து இருக்கும் ஒரு சிங்கிள் ஆடவனைச் சுற்றியே இந்தக் கதை அமைந்திருக்கின்றது. வாழ்க்கையில் வெறுப்பு அடைந்து இருப்பவர்கள் பார்த்து இரசிக்க வேண்டிய ஒரு திரைப்படம்.




நகைச்சுவை என்ற பெயரில் அறுவைப் படங்களை எடுப்பதில் ஹொலிவூட்டிற்கு நிகர் ஹொலிவூட்டே (எங்கள் விசய் மற்றும் அசித் போன்றவர்கள் அக்சன் படம் எடுத்து அது காமெடிப் படம் ஆவது வேறு விடையம்). அந்த வரிசையில் சேர்ந்து விடாமல் தனித்து நிற்கின்றது இந்த திரைப்படம். பெரிய எதிர் பார்ப்புகளுடன் இந்த திரைப்படத்தைப் பார்க்க ஆரம்பிக்காவிட்டாலும் போக போக திரைப்படத்துடன் ஒட்டிவிட்டேன்.

வாழ்க்கை வெறுத்துப் போய் சமூகத்துடன் ஒட்டாமல் ஒட்டாண்டியாக வாழ்ந்து வருகின்றார் ஜிம் கரி. வங்கியொன்றில் பணி புரியும் ஜிம் கரி (கால்) தனது பணியில் கூட பெரிதாக மிளிராமல் இருக்கின்றார். இந்த வேளையில் அவரின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு நிகழ்வுதான் "Yes Man" எனும் ஒரு நிகழ்ச்சித் தொடரில் இணைந்து கொள்வதாகும்.

இந்த நிகழ்ச்சித் தொடரில் இணைந்து கொண்டபின்னர் வாழ்க்கையில் வரும் அனைத்து வாய்ப்புகளுக்கும் "ஆம்" என்று சொல்லவேண்டும் என்பதே கட்டுப்பாடு. அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் என்பது நமக்குத் தெரிந்த கதை தானே?? ஆனால் ஜிம் கரி எதையும் அசண்டை செய்யாமல் ஆம் ஆம் என்று வாழ்க்கையை ஓட்டுகின்றார்.

இந்த ஆம் ஆம் பழக்கம் ஆரம்பத்தில் ஆகா ஓஹோ என்று வேலை செய்கின்றது. அழகான ஒரு காதலியைக் கூடத் தேடிக் கொடுகின்றது. ஆனால் மிகுதி என்ன ஆனது?? டிவிடில பாருங்க.. ஹி.. ஹ.. ;)

அனைவரும் பார்த்து இரசிக்க வேண்டிய திரைப்படம். முடிவில் கொஞ்சம் மசாலா கலந்து இருந்ததைக் காணக்கூடியதாக் இருந்தது ஆனால் திரைப்படம் அருமையாக இருந்தது.

ஜிம் கரி நகைச்சுவைத் திணைக்களத்தை வாடகைக்கு எடுத்து மொக்கை மொக்கையாகப் போட்டுத் தாக்குகின்றார். சில இடங்களில் காமெடி என்று கடியாக இருந்தாலும் பெரும்பாலும் நல்ல நகைச்சுவையாகவே திரைப்படம் நகர்கின்றது.

My Rating 70/100
IMDB 70/100

லேபிள்கள்: ,

Wednesday, January 20, 2010

Zombieland (2009)

Your Ad Here

இந்த சொம்பி (Zombie) என்ற எண்ணக்கருவை வைத்துப் பல திகல் திரைப்படங்கள் வெளிவந்தன. அவற்றில் Rsident Evil, The Legend போன்ற திரைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள். அவற்றில் வரும் அதே சொம்பிகள்தான் இந்த திரைப்படத்திலும் ஆனால் ஒரு வித்தாயாசம், நான் அறித்தவரை இதுதான் சொம்பிகளை வைத்து எடுத்த முதலாவது காமடித் திரைப்படம். காமடித் திரைப்படமா, இல்லை திகில் திரைப்படமா என்று யோசித்துக் கொண்டிருக்கையிலே திரைப்படம் கல கலவென்று முடிந்துவிடுகின்றது.




வழமைபோல ஹொலிவூட் பாலா சொல்கின்ற கனடாவில் தொடங்கி மெக்சிக்கோவில் முடிகின்ற உலகத்தில் இருக்கும் மானிடர்கள் பலரும் சொம்பி தாக்குதலில் தாங்களும் சொம்பி ஆகிவிட எஞ்சியிருக்கும் சில மானிடர்களின் சிரிப்புச் சாகசமே இந்தத் திரைப்படம்.

Columbus என்று ஒரு பொடியன் அவனுக்கு எதைக் கண்டாலும் பயம். அதிலும் கோமாளியைக் கண்டால் இன்னும் பயம். ஆமாம், தேனாலி கமல் மாதிரி. அதனால் சொம்பித் தாக்குதலில் இருந்து தப்பிக்க தனக்கு தானே பல விதிகளை வகுத்துக்கொள்கின்றான். உதாரணமாக காரில் ஏறும் போது பின் ஆசனத்தில் சொம்பி இருக்கின்றதா என்று பார்த்தல், இரண்டுக்குப் போகும் போது கையில் துப்பாக்கியுடன் இருத்தல், முதல் தடவை சொம்பியை சுட்டாலும் இரண்டாம் தடவையும் மண்டையை குறிபார்த்துச் சுடதல் போன்றவையடக்கம். அதைவிட எப்போதும் ஹீரோவாக ரை பண்ணாதே என்கிறதும் ஒரு முக்கியமான விதிமுறை.

இந்த கொலம்பஸ் தன் தாய் தந்தையர் இருக்கும் அமெரிக்காவின் கிழக்குத் திசை நோக்கிப் பயனிக்கின்றான், அவனுடன் இணையும் எதற்கும் அஞ்சா ஒரு மனிதன் மற்றும் திருட்டு தண்டா செய்யும் 2 பெண்கள்.

அப்புறம் அந்த திருட்டுத் தண்டா செய்யும் ஒரு பெண்ணுடன் நம்மவர் காதலில் விழுவார் என்பதையும் நான் சொல்லியா உங்குளுக்குத் தெரியவேண்டும்.

இவர்கள் எவ்வாறு ஒருத்தருக்கு ஒருவர் அறிமுகம் ஆகின்றார்கள், இவர்களின் பயனம் போன்றவற்றை மையப்படுத்தி கதை மிகுதி நகர்கின்றது.

IMDB: 79/100
Mayu: 50/100

லேபிள்கள்: ,

Saturday, September 26, 2009

The Other Man (2008) விமர்சனம்

Your Ad Here

மணமான நபர்களின் கள்ளக்காதல் வெளித் தொடர்புகளை வைத்து பல திரைப்படங்கள் இது வரை ஆங்கில சினிமாவில் வெளிவந்துள்ளது. Unfaithful போன்ற திரைப்படங்கள் இவற்றில் பிரபலமாக பேசப்பட்ட திரைப்படங்கள். The Other Man திரைப்படக் கதையும் இது சம்பந்தப் பட்டதே. மனைவியின் கடந்த காலம் பற்றி அறிய கிடைக்கும் கணவன் மணம் உடைந்து அந்த பழைய கள்ளக் காதலனைத் தேடுவதே கதை.



ஒரு நாள் தன் மனைவியின் செல்பேசிக்கு வரும் Voice Mail இல் ஆரம்பித்து email, password protected folder வரை சென்று மனைவியின் கள்ள உறவு பற்றி அறிந்து கொள்கின்றான் கணவன். பின்னர் அந்த நபர் யார் என்று அறியும் நோக்கில் மனைவி போல மின்னஞ்சலுக்கு பதில் போட்டு அவன் இருக்கும் இடம் சென்று அந்த நபரை சந்திக்கின்றார் கணவர்.

திரைப்படம் முடியும் போது வழமைபோல ஒரு அதிர்ச்சியான தகவலைச் சொல்கின்றார்கள். அதை கேட்டதும் அட பாவமே என்று மனம் குழைகின்றது.



Liam Neeson இந்த திரைப்படத்தில் கணவன் பாத்திரத்தில் நடிக்கின்றார். முன்னாள் கள்ளக் காதலன் பாத்திரத்தில் Antonio Banderas நடிக்கின்றார். Liam Neeson நல்ல ஒரு நடிகர்தான் இவரை நீங்கள் Taken, Batman Begins போன்ற திரைப்படங்களில் பாத்திருக்கலாம்.

Antonio Banderas நீங்கள் பார்த்து இரசித்த ஷிரேக் திரைப்படத்தில் வரும் Puss in the boot பாத்திரத்திற்கு குரல் கொடுத்திருந்தார். Puss in the boot என்றே ஒரு திரைப்படம் எதிர்காலத்தில் வர உள்ளது. அதற்கும் இவரே குரல் கொடுக்கவுள்ளார்.


வழைமையான பழைய மொந்தையில் புதிய கள். கண்டிப்பாக இது வயது வந்தோரிற்கான திரைப்படம்.

RATING 65/100

லேபிள்கள்: ,

Friday, September 25, 2009

Corpse Bride (2005) விமர்சனம்

Your Ad Here


திருமணத்திற்கு நிச்சயம் செய்தாகிவிட்டது. ஆனால் இப்போது தேவாலயத்தில் அருட் தந்தை முன்னால் ஒத்திகை பார்க்கவேண்டும். அங்கேதான் நம்ம ஹீரோ வீக்!. ஒத்திகையில் தாறுமாறாக சொதப்பும் இந்த ஹீரோ வெட்டவெளியில் பனி மூட்டத்தில் மூடுபனியில் ஒரு மரக்கொப்பில் மோதிரத்தைப் போட்டு தன் திருமண ஒத்திகையை நடத்துகின்றார். இங்கேதான் காரியம் கெட்டு குட்டிச்சுவரானது. மரக்கொப்பென்று நினைத்து அவர் மோதிரத்தைப் போட்டது ஒரு இறந்த பெண்ணின் எலும்புக்கூட்டு விரலுக்கு. ப்பூ...! இப்ப செத்த சவம் எழும்பி வந்துட்டுதுங்கோ!



Johnny Depp கதையின் நாயகனுக்கு குரல் கொடுத்திருந்த காரணத்தால் இந்த திரைப்படத்தை நான் பார்த்தேன். ஆனாலும் இந்த அனிமேசன் திரைப்படம் என்னை ஏமாற்றவில்லை. அருமையான கதையமைப்பு, வசனங்கள், காட்சியமைப்புகள் என்று அற்புதமான திரைக்காவியம்.

முன்பு ஒரு ஆணால் ஏமாற்றப்பட்டு இறந்துபோன ஒரு மணப்பெண் தற்செயலாக நம் ஹீரோவிற்கு மனைவியாகிவிட நம் ஹீரோவை இழுத்துக்கொண்டு இந்த பேய்ப் பெண் தம் பேய் உலகத்திற்கு சென்றுவிடுகின்றாள். அங்கே நம் மனித நாயகனுடன் புதிய வாழ்க்கை ஒன்றை ஆரம்பிக்க நினைக்கின்றாள்.

இதேவேளை தன் அருமை காதலியைப் பிரிந்து வாடும் காதலன் மீள அவளுடன் சேர முயற்சிக்கின்றான். இவர்கள் சேர்ந்தார்களா இல்லை நம் ஹீரோ ஜீரோவாகி இறுதிவிரை பேய் பெண்ணுடன் வாழ்க்கை நடத்தினாரா என்பதை DVD இல் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.


திரைப்படத்தில் மற்றுமொரு சிறப்பான அம்சம் இசை. ஓபேரா ரக இசையை இரசிப்பவர்கள் நிச்சயமாக இந்த திரைப்படத்துடன் காதல் கொள்வர். அதைவிட நாயகியின் உணர்வுகள் அவர் பியானோ வாசிப்பதன் மூலம் காட்டுவார்கள். ஆஹா.. அருமை. வேட்டைக் காரன்கள் எல்லாரும் எப்ப இப்படி சிந்திப்பார்களோ???



இது ஒரு நாடோடிக் கதையை மையமாக கொண்டு எழுதிய திரைப்படமாம். நீங்களும் அந்த நாடோடிக் கதையை வாசித்துப் பார்க்கலாம்.



அருமையான அனிமேசன் திரைப்படம் ஒன்றைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் இந்த திரைப்படத்தைக் கட்டாயம் பாருங்கள். குடும்பத்துடன் பார்த்து இரசிக்க கூடிய திரைப்படம்.

RATING : 85/100

புல்லட்டின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப இப் பதிவில் இருந்து ரேட்டிங் முறமையும் அறிமுகப் படுத்தப்படுகின்றது.

லேபிள்கள்: , ,

Monday, September 21, 2009

Knowing (2009) விமர்சனம்

Your Ad Here
கலிகாலம் முற்றி கிருஷ்ணன் குதிரையில் வந்து உலகை அழித்து செல்வார் என்று இந்து சமயமும். நோவா பேளை பற்றி பைபிளும் சொன்ன கதையை தற்காலத்தில் நடப்பது போல ஹொலிவூட் பாணியில் இயக்குனர் Alex Proyas காட்டியுள்ளார். ஆரம்பத்தில் மெல்ல மெல்ல ஆரம்பித்து சூடுபிடித்து கதிரை நுனியில் உட்காரும் போது டபுக்கென்று திரைப்படம் முடிந்துபோய் விடுகின்றது.



அன்று
1959ல் ஒரு பாடசாலையில் 50 வருடத்தின் பின்னர் உலகம் எவ்வாறு இருக்கும் என்பதை கற்பனை செய்து வரையுமாறு கூறுகின்றார் ஒரு ஆசிரியர். இந்த படங்களை ஒரு சின்ன இரும்பு டப்பாவில் இட்டுப் பூட்டி 50 ஆண்டுகளின் பின்னர் 2009ல் திறப்பதாக திட்டம். எல்லாச் சிறுவர்களும் பல்வகையான சித்திரங்களை வரையும் போது ஒரு சிறுமி மட்டும் அடுக்கடுக்காக சில இலக்கங்களை எழுதுகின்றார். பட படப்பாக எந்நேரமும் காணப்படும் அவர் காதுக்குள் எந்நேரமும் ஏதோ இரைச்சலாகவும் பேசுவதும் போல சத்தம்.

இன்று
MIT இல் பேராசிரியராக இருக்கும் John Koestler (Nicolas Cage) இன் மகன் அதே பாடசாலையில் கல்வி கற்கின்றார். 50 ஆண்டுகளின் பின்னர் அந்த சின்ன இரும்பு டப்பா உடைக்கப்பட்டு அதனுள் இருக்கும் சித்திரங்கள் உறைகளில் இட்டு அங்கு படிக்கும் மாணவர்களிடன் பள்ளி நிர்வாகம் வழங்குகின்றது.

இந்த சின்னப்பையன் கையில் வந்து கிடைப்பதோ அந்த இலக்கங்கள் கொண்ட கடதாசி.

இதன் பின்னர் விடாது சனி என்று விதி இவர்களை துரத்தோ துரத்து என்று துரத்துகின்றது. இந்த இலக்கங்களின் பின்னால் இருக்கும் மர்மத்தை பேராசிரியர் யோன் மெல்ல மெல்ல கழற்றுகின்றார். இதனால் நிலமை மேலும் சிக்கலாகின்றது.

மொத்த மனித இனமுமே அழிவின் விளிம்பிற்கு வருகைதருகின்றது. இதில் இருந்து மானிடம் மீண்டதா வீழ்ததா என்பது மிகுதிக் கதை.



மெல்ல ஆரம்பிக்கும் படம் மெதுவாக சூடேறி அப்படியே பட பட என்று கதிரை நுனிக்கு அழைத்துவருகின்றது. முடிவு ஏதோ சொதப்பல் போல இருந்தாலும் இதைவிட நல்ல ஒரு முடிவு இந்த திரைப்படத்திற்கு கொடுப்பதும் கடினம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

Nicolas Cage இனதும் அவரது மகனாக நடிக்கும் சிறுவனினதும் நடிப்பு அபாரம். இயக்குனர் பற்றிச் சொல்லத் தேவையில்லை தானே. iRobot எனும் திரைப்படத்தை வில் ஸ்மித்தை வைத்து எடுத்து உலகத்தை உச் கொட்ட வைத்தவர்.

திரைப்படத்தில் பிரமாண்டம் விண்ணளவு உள்ளது. குறிப்பாக விமானம் விபத்துக்ககுள்ளாகும் காட்சி, இரயில் விபத்துக்குள்ளாகும் காட்சி என்பன.

பார்க்க திரைப்படம் ஒன்று தேடுபவர்கள் இந்த திரைப்படத்தைப் பார்க்கலாம். குடும்பமாக உட்கார்ந்து நடுங்கி நடுங்கி இந்த திரைப்படத்தைப் பார்க்கலாம்.

லேபிள்கள்: ,

Thursday, September 10, 2009

DISTRICT 9 விமர்சனம்

Your Ad Here

வேற்றுக் கிரக வாசிகள் பூமிக்கு வந்து பூமியில் வதியும் கோமாளிகள் மனிதருடன் அடிபிடிப் படுவதாக ஆயிரத்தெட்டு திரைப்படங்களை ஹொலிவூட் காரங்கள் எடுத்திருப்பார்கள். அந்த வரிசையில் ஆயிரத்தொன்பதாவது திரைப்படம் இது. பூமியில் ஒரு கூட்ட வேற்றுக் கிரகவாசிகள் அடைக்கலம் புகுகின்றார்கள். அவர்கள் பல்கிப் பெருகி மனிதர்களுக்குப் பெரும் இடையூறாக விரைவில் மாறிவிடுகின்றார்கள். இந்த வேற்றுக் கிரக வாசிகளை கட்டுப்படுத்த மனிதர்கள் எடுக்கும் முயற்சி பற்றியே இந்தக் கதை விரிகின்றது. வழமையான பூச்சுத்தல்களுக்கும் குறைவில்லை.

தென் ஆபிரிக்காவின் யோகன்னஸ்பேர்க நகரத்தின் மீது ஒருநாள் ஒரு விண்வெளிக் கலம் தரித்து நிற்கின்றது. அந்த கலம் நகராமல் அப்படியே நிற்பதுடன் அதன் கட்டளைப் பகுதி கீழே விழுந்து விட்டதாகவும் தகவல்கள் கசிகின்றன (என்ன விஜய் படமாக இருக்கும் எண்டு பயப்பிடுறியளோ?). முதலில் சிறிது குழப்பம் அடையும் மனித குலம் விழுந்தடித்து தனது ஒரு அணியினை ஆராய்வதற்காக சம்பவ இடத்திற்கு அனுப்புகின்றனர்.

பெரிதாக டிஷூம் டிஷூம் ஒன்று எதிர்பார்ப்பவர்கள் இந்த இடத்தில் ஏமாந்து போவர் ஏன் எனில் உள்ளே செல்லும் அணியினர் உணவில்லாம் வாடியிருக்கும் வேற்றுக் கிரகவாசிகள் கும்பலைக் காண்கின்றனர்.

இந்த வேற்றுக் கிரகவாசிகளை தத்தெடுக்கும் அரசு அவர்களை ஒரு முகாமில் தங்கவைக்கின்றது. இந்த முகாமின் பெயர்தான் District 9. விரைவிலேயே இந்த முகாம் ஒரு குப்பம் ஆகிவிடுகின்றது. பீற்றர் ஜக்சன் Slum dog Millionaire திரைப்படம் பார்த்தாரோ தெரியாது இப்படியாக வேற்றுக் கிரகவாசிகள் வாழும் இடம் குப்பம் ஆகிவிட்டதாக கூறுகின்றார்.

வேற்றுக் கிரகவாசிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் ஜோகன்னஸ்பேர்க் நகரத்தில் கூட கூட அதனால் நகர வாசிகள் மிக வெறுப்படைகின்றனர். நகர மக்களின் எதிர்ப்பு கூடவே வேற்றுக் கிரகவாசிகளை நகரில் இருந்து 240 கி.மீ தூரத்தில் உள்ள வேறு ஒரு முகாமிற்கு இடம் மாற்றும் முயற்சிகள் தொடங்குகின்றது. இந்த இடம் மாற்றும் முயற்சியை Multinational United (MNU) எனும் தரியார் இராணுவப் பாதுகாப்பு நிறுவனம் பொறுப்பேற்கின்றது.

இங்கேதான் எங்கள் ஹீரோவான Wikus van de Merwe அறிமுகம் ஆகின்றார். காற்றில் பறந்துவந்தோ அல்லது சப்பாத்தைக் காட்டி டெனிமை காட்டி அப்புறம் முகத்தைக் காட்டியோ ஹீரோ அறிமுகம் நடக்கவில்லை.

இதற்குப் பிறகு என்னாச்சு என்பதை வெள்ளித்திரையிலே டிவிடியிலோ, டொரண்ட் புண்ணியத்திலயோ பார்த்து கொள்ளுங்கள்


திரைப்படத்தில் கணிசமான பகுதி ஒரு கையடக்க கமிராவில் எடுப்பது போலவும் பதிவாகின்றது. இந்த கையடக்க கமிராவில் எடுப்பதாக காட்டும் காட்சிகள் குளோவர்பீல்ட் எனும் திரைப்படத்தை ஞாபகம் ஊட்டுகின்றது.

திரைப்படம் தொடங்கியதில் இருந்து மெல்ல மெல்ல கதை சூடுபிடிக்கத் தொடங்குகின்றது. தறிகெட்டுத் திரியும் வேற்றுக் கிரகவாசிகள் மத்தியில் புத்திக்கூர்மையுடன் சில வேற்றுக்கிரக வாசிகள் இருப்பதாயும் காட்டியுள்ளார்கள். அதைவிட மனிதனில் கெட்ட குணம் பிறகு நல்ல குணம் என்று அந்தப் பக்கத்தாலும் கதை சிறிது நகர்ந்து கொள்கின்றது.

கடுமையான வன்முறைக் காட்சிகள் நிறைந்திருப்பதால் சிறுவர்களுக்கு ஏற்றபடம் என்று நினைக்கவில்லை.

மகா மட்டம் என்று இந்த திரைப்படத்தை விமர்சனம் செய்யும் மக்குகளை எதுவும் செய்ய முடியாது. ஆனால் எல்லாரும் இம்மாதிரியான Sci-fi திரைப்படங்களை விரும்பிப் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம்.

லேபிள்கள்: ,

Sunday, July 26, 2009

Transformers: Revenge of the Fallen

Your Ad Here

ட்ரான்ஸ்பாமர்ஸ் முதலாம் பாகம் வெளிவந்து சக்கைபோடு போட்டவிடவே இருக்க முடியாத காரணத்தால் ஹாலிவூட் கூட்டம் ஒன்றுசேர்ந்து எடுத்துத் தள்ளிய திரைப்படம்தான் இந்த ட்ரான்ஸ்போமர்ஸ்: Revenge of the Fallen.

வேற்று கிரகம் ஒன்றில் இருக்கும் இயந்திர மனிதர்களின் யுத்தம் பூமிக்கு இழுத்துவரப்படுவதுதான் முதலாம் பாகத்தின் கதை. முதலாம் பாகத்தில் கெட்ட இயந்திர மனிதர்களை நல்ல இயந்திர மனிதர்கள் அழிப்பதுடன் முடிகின்றது. அத்துடன் மனிதர்களின் இந்த கோளில் நல்ல இயந்திரமனிதர்களான ஓடோபொட்ஸ் தங்கிவிடுகின்றனர். அடுத்த யுத்தம் விரைவில் தொடங்கும் என்று முதலாம் பாகம் முடிந்துவிட்டது. இந்நிலையில்தான் இன்று கொழும்பு மஜஸ்டிக் சிட்டி திரையரங்கில்போய் உட்கார்ந்தேன்.



பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கு வரும் இயந்திரங்கள் நட்சத்திரங்களில் இருந்து சக்தியை உறிஞ்சி, இயந்திர மனிதர்களை உருவாக்கும் ஓல்ஸ்பார்க்கிற்கு சக்தியூட்ட முனைகின்றனர். அதற்கு ஒரு இயந்திரம், அந்த இயந்திரத்தை இயக்க ஒரு திறப்பு. ஆனாலும் அதை இயக்க முடியாமல் முடக்கப்படுகின்றார் போலன் எனப்படும் இயந்திர மனிதன். இதற்காக பழிவாங்கும் நோக்குடன் தக்க தருணத்திற்காக காத்திருக்கின்றான் வில்லன்.

மறுமுனையில் கல்லூரி செல்லத்தயாராகும் எங்கள் நாயகனும் அவரின் மெக்கானிக் காதலியும் ஒரே உம்மா.. உம்மா... ;)

SEOUL, SOUTH KOREA - JUNE 09:  (L-R) Actress M...Image by Getty Images via Daylife


மனிதர்களுடன் ஒரணியில் நின்று கெட்ட இயந்திர மனிதர்களுக்கு எதிராகப் போராடுகின்றன ஒப்டிமஸ் பிரைம் தலைமயிலான இயந்திரமனிதர்கள். இப்படியான இயந்திர மனிதர்களை கையாள NEST எனும் அமைப்பையும் உருவாக்குகின்றனர். விண்வெளியில் இருக்கும் விண்வெளிக் கலத்தை Hack செய்து அதில் மூலமாக NEST இன் இரகசிய தகவல்களை அறிந்துகொண்டு, இறந்த கெட்ட இயந்திர மனிதன் மக்கட்டோரனை உயிர்ப்பூட்டுகின்றனர் கெட்ட இயந்திரங்கள். இவனை முதலாம் பாகத்தின் முடிவில் ஒப்டிமஸ் பிரைம், சாம்மின் உதவியுடன் கொலைசெய்கின்றார்.

அப்பாடியோவ் என்ன தலை சுத்துதா??? அம்புட்டு பெரிய பூமாலை சுத்தினாங்களே ;)

ஷங்காய் நகரில் நடக்கும் அதிரடித் தாக்குதல் தொடக்கம் இறுதிக் காட்சியில் எகிப்தில் நடக்கும் இறுதி யுத்தம் வரை பல பல வில்லங்கமாக பூச்சுத்தல்கள். நல்ல இயந்திரங்கள் எகிப்தில் பிரமிட்டுக்கருகில் தமது Last Stand ஐ ஏற்படுத்துவது அருமை. நல்ல இயந்திரங்களும் கெட்ட இயந்திரங்களும் மோதும் காட்சிகள் கதிரை நுனியில் உட்கார வைக்கின்றது.

நம்ம ஹீரோ சாம்மை பிடிக்க முயலும் கெட்ட இயந்திரங்களிடம் இருந்து சாமை நல்ல இயந்திரங்கள் காப்பாற்றினாலும் ஒப்டிமஸ் பிரைம் எனும் தலைவர் இயந்திரம் இறந்துவிடுகின்றது.

இப்படியே கதை இழுத்து இழுத்து எகிப்திற்குச் செல்கின்றது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவான நட்சத்திரங்களின் சக்தியை உறிஞ்சக்கூடிய இயந்திரைத்தை சுற்றி எழுப்ப பட்டதுதான் இந்த பிரமிட்டுகளாம். அதை உயிர்ப்பூட்ட துடிக்கும் வில்லனும் அதை நிறுத்த முயலும் நாயகன் சாம், அமெரிக்கப் படையினர், நல்ல இயந்திர மனிதர்கள் (ஓட்டோபொட்ஸ்) என்று கதை நீள்கின்றது.

பூம்.. பூம்.. என்று திரைப்படம் தொடங்கியதில் இருந்து ஒரே சத்தம்தான். பல திரைவிமர்சகர்களும் இந்த திரைப்படத்தை வலம் இடம் என்று வாங்கியிருந்தாலும், சாதாரமான பொழுதுபோக்கு திரைப்படம் இது என்றுசொல்வேன். நீங்கள் ட்ரான்ஸ்போமர்ஸ் விசிறியாக இருந்தால் கட்டாயம் பாருங்கள். ;).

அப்படியே இந்த பாட்டையும் கேட்டுஇரசித்துவிட்டுச் செல்லுங்கள்.

லேபிள்கள்: ,

Sunday, June 28, 2009

Night at the Museum: Battle of the Smithsonian (2009)

Your Ad Here

கடந்த சனிக்கிழமை நேரம் வேலை ஒன்றும் இல்லாமல் போகவே Liberty Cinemaவில் கிரகப் பிரவேசம் செய்ய முடிவுசெய்தேன். முதலில் அங்கே Start Trek திரைப்படம் ஒடுவதாக நினைத்தேன். போய்ப் பார்த்த பின்னர்தான் தெரிந்தது அங்கே நைட் அட் த மியூசியம் ஒடுது என்று. ஏற்கனவே முதலாம் பாகம் பார்த்திருந்தமையால் இந்த பாகத்திலும் ஓரளவு நம்பிக்கை இருந்தது.

Larry Daley ஒரு முன்னாள் அருங்காட்சியக காவலாளி. இப்போது டார்ச் லைட்டுவிற்கும் ஒரு சேல்ஸ் ரெப் ஆகிட்டார் ;). ஒரு நாள் மீள தான் பணிபுரிந்தஅருங்காட்சியத்துக்குச் செல்லும் போது அங்கே இருந்து பொருட்களைஅப்புறப்படுத்துவதைக் காண்கின்றார். இவை அனைத்தும் வேஷிங்டன் டி.சியில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய அருங்காட்சியத்திற்கு மாற்றப்படுவதைகேள்விப்பட்டு அலறியடிக்கின்றார். அங்கிருந்து எவ்வாறு இந்தஅரும்பொருட்களை மீட்டு தனது பழைய அருங்காட்சியத்திற்கு கொண்டு வருகின்றார் என்பதுதான் மிகுதிக் கதை.



முதல் பாகத்தை நீங்கள் பார்த்திருக்காவிட்டால் மேல் உள்ள குறிப்பை வாசித்து தலைகாய்திருப்பீர்கள். அரும்பொருட்களை மாற்றும் செய்தியறிந்து அவர் அலறியதற்கு காரணம், இரவானால் அந்த அருங்காட்சியத்தில் உள்ள பொருட்கள் உயிர்பெற்று எழுந்துவிடும் என்பதே.

அருங்காட்சியத்தில் இருக்கும் ஒரு பழைய தங்கத் தகடு இரவானதும் அருங்காட்சியத்தில் இருக்கும் அனைத்துப் பொருட்களுக்கும் உயிரூட்டிவிடிகின்றது. இப்போது இந்தப் பொருட்கள் உலகின் பெரிய அருங்காட்சியகத்திற்குச் சென்றால் அங்குள்ள பொருட்கள் எல்லாம் உயிர்பெற்றுவிடுமல்லவா???

எப்படியோ Larry Daley எல்லையை மீறி வோஷிங்டன் செல்லுகின்றது அருங்காட்சியப் பொருட்கள். அவற்றை மீட்க அவர்களுடன் பின்னாலேயே Larry Daley ம் போய்ச்சேர்ந்து கடும் சிக்கல்களில் மாட்டிக்கொள்கின்றார்.

இதற்குமேலே நான் கதையை சொல்லப்போவதில்லை. முதலாம் பாகத்துடன் ஒப்பிடும் போது இந்தப் பாகம் அவ்வளவு விறுவிறுப்பு இல்லை. முதலில் அருங்காட்சிய பொருட்கள் எழுந்து வருவதை பார்க்கும் போது இருந்த திகில் இப்போது இல்லை.

ஆனாலும் என்னை சுற்றி இருந்த சிறுவர் குலாம் திரைப்படத்தை இரசித்துப் பார்த்தமை மூன்றாம் பாகத்திற்கான ஒரு அபாய அறிகுறி ;).

நாயகன் Larry Daley உடன் திரைக்கதையில் சேர்ந்துகொள்ளுகின்றார் நாயகி Amelia Earhart. இவர் ஒரு மெழுகுப் பொம்மை. அதாவது முதலாவதாக அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு விமானம் ஓட்டிச்சென்ற பெண்மணி. இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டி சிறப்பு. அநியாயத்திற்கு அந்தப் பெண்ணும் அடிக்கடி Larry Daley க்கு நச்சு நச்சு என்று முத்தம் வைக்கின்றார்.

இதைவிட ஆபிரகாம் லிங்கன், சீசர், நெப்போலியன் மற்றும் வில்லன் எகிப்திய மன்னன் ஆயியோரும் வந்து அலுப்படிக்கின்றனர்.

வீட்டில் சின்னப்பசங்க இருந்தா கூட்டிட்டுப்போய் பார்த்து இரசித்துவிட்டு வாருங்க. மற்றும்படி பெரியவர்களை கட்டிப்போடும் அளவிற்கு இந்த திரைப்படத்தில் பெரிய ஈர்ப்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை.

லேபிள்கள்: ,

Saturday, June 27, 2009

X-Men Origins: Wolverine (2009) விமர்சனம்

Your Ad Here
நம்மில் பலரும் சிறுவயதில் X-MEN கார்ட்டூன்களை தொலைக்காட்சியில் பார்த்து இரசித்தோம். அப்போது பல தடவை பிரத்தியோக வகுப்புகளை எல்லாம் கட் அடித்துவிட்டு இந்த கார்ட்டூன் தொடரைப் பார்த்தமை இன்றும் நினைவிருக்கின்றது. பின்னர் இந்த X-MEN திரைப்படமாக எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. முதல் பாகம் நன்றாக வெற்றிபெறவே இரண்டாம், மூன்றாம் பாங்களையும் வெளியிட்டு வசூலை அள்ளிக்கொண்டனர் ஹொலிவூட் மக்கள். X-MEN எனப்படுபவர்கள் மரபணு விகாரத்தால் சாதாரண மனிதர்களை விட வித்தியாசமான சக்தி கொண்டவர்களாக இருப்பர். இதில் எனக்குப் பிடித்த எக்ஸ்-மென் பாத்திரம் வூல்வரின். முஷ்டியை மடகினால் முஷ்டிக்கூடாக மூன்று கத்தி வெளியே வரும். ஆகா...! என்ன ஒரு ஹீரோ. இந்த எக்ஸ-மென் தொடரில் ஒரு பாத்திரமாக வூல்வரினின் வாழ்க்கையை இந்த திரைப்படம் காட்டுகின்றது. உண்மையில் இந்த திரைப்படம் முதலாம் பாகமாக வெளிவந்திருக்க வேண்டும்.



வூல்வரினாக ஹியூஜ் ஜக்மன் நடித்திருந்தார். இவரை பல திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். உதாரணமாக வன் ஹெல்சிங் போன்ற திரைப்படங்கள். சில வாரங்களுக்கு முன்புதான் இலங்கையின் திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியானது. ஒரு நட்புவட்டம் திரைப்படம் பார்க்க சொல்லி அழைப்பு வர அதனுடன் தொத்திக்கொண்டு லிபர்ட்டி சினிமாவில் உட்கார்ந்து திரைப்படத்தைப் பார்த்தேன்.
















காமிக்ஸ் புத்தக உறை
முதலிலேயே வூல்வரின் ஒரிஜின்ஸ் காமிக்ஸ்களை வாசித்திருந்தேன். அதே கதையை எதிர்பார்த்து திரைப்படம் தொடங்கும் போது காத்திருந்தேன். ஆகா..! என்ன ஒரு ஏமாற்றம், காமிக்ஸ் கதைக்கும் திரைப்படக் கதைக்கும் வெகு தூரம். காமிக்ஸில் இழையோடும் அருமையான காதல் கதையை கத்தரித்து விட்டார்கள்.

சரி காமிக்ஸை மறந்துவிட்டு திரைப்படத்தைப் பார்ப்போம் என்று பார்க்கத்தொடங்கினேன்.

கனடாவில் திரைப்படம் ஆரம்பிக்கின்றது. தனது தந்தையை கொலை செய்தவனை கொலைசெய்துவிட்டு தப்பி ஒடுகின்றார் நம்ம லோகன். அவர்தான் பெரியவராகி பின்னாளில் வூல்வரின் ஆகின்றார். இவருடன் சேர்ந்து ஒடுகின்றார் அவரின் சகோதரன் (half brother). இந்த அரைவேக்காடுதான் பின்னாளில், வூல்வரினின் பரம எதிரியான சைபரூத்.

மரணம் ஏற்படாத வூல்ரினும் அவர் சகோதரனும் பல்வேறு அமெரிக்க யுத்தங்களில் பங்குபெறுகின்றனர். பின்னாளில் இவர்கள் ஒரு அதிகாரியினால் பயன்படுத்தப்படுகின்றார். வூல்வரின் எலும்புகளை உருக்கி அதற்குப் பதிலாக உலோகம் போன்ற பொருளை பொருத்தி வூல்வரினை பலமான ஒரு மனிதனாக மாற்றுகின்றனர். இந்தக் கதையை ஏற்கனவே முந்தய திரைப்படங்களில் பிட்டு பிட்டாக காட்டினார்கள். காமிக்ஸ் இரசிகர்கள் இந்தப் பாகத்தை X Weapon எனும் தொடரில் இரசிக்கலாம்.

திரைக்கதை சுமார், special effects அருமை. இந்த திரைப்படம் உங்களை ஏமாற்றாது, ஆனால் நல்ல திரைப்படம் என்று உறுதியளிக்கவும் முடியாது. நீங்கள் என்னைப்போன்ற X-MEN அல்லது Wolverine பைத்தியம் என்றால் கட்டாயமாக இந்த திரைப்படத்தைப் பார்க்கவும்.

கொசுறுத் தகவல்: திரைப்படம் முடிந்தவுடன் எழுந்து வந்துவிடாதீர்கள். எழுத்தோட்டம் முடிந்தபின்னர் ஒரு சிறய காட்சியுள்ளது. இதை வைத்துப் பார்க்கும் போது இன்னுமொரு திரைப்படம் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

லேபிள்கள்: ,

Sunday, April 19, 2009

Punisher: War Zone (2008) - விமர்சனம்

Your Ad Here

காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை விசயகாந்த் தீவிரவாதிகளை துரத்தி துரத்தி சுடுவது போல இந்த பனிஷர் சமூகவிரோதிகளை துரத்தி துரத்திச் சுடுகின்றார். மார்வல் காமிக்ஸ்கதைப் பாத்திரத்தை மையமாக கொண்டி இந்த திரைப்படம்எடுக்கப்பட்டுள்ளது. அதிகமாக வெட்டுக் கொத்து என்றுதிரைப்படம் நகர்கின்றது. 300 திரைப்படத்தில் எப்படி இரத்தம்கொப்பளிக்க கொப்பளிக்க கொலைசெய்வார்களோ அவ்வாறேஇந்த திரைப்படத்திலும் கொலைகள். நெஞ்சைத்திடப்படுத்திக்கொண்டே பார்க்க முடியும். Ray Stevenson சமூக விரோதிகளைத்தண்டிக்கும் ஒரு விஜிலாண்டியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் இதேதொடரில் முன்பு வந்த திரைப்படத்துடன் ஒப்பிடும் poothu மோசமாக இருப்பதாகபனிஷர் இரசிகள் குறைகூறுகின்றனர். விசயகாந்த் படம் என்று தொடக்கத்தில் கூறியதால் ஏதாவது சப்பை படம் என்று நினைத்து வைக்காதீங்க ;)



ஒரு வன்முறை கூட்டத்தால் குடும்பத்தை இழக்கும் பிராங் விரக்தியின் முடிவிற்கு வந்து சமூக விரோதிகளையும் கொள்ளைக்கார குடும்பங்களையும் ஆணிவேரோடு அழிக்கின்றார். இந்தப் பயனத்தில் ஆறு வருடங்களாக இருக்கும் பிராங்கின் நடத்தைக்கு NYPD (அதாங்க.. நிவ்யோர்க் பொலிஸ் டிப்பார்ட்மென்ட்)இல் இருக்கும் சில பொலீஸ் அதிகாரிகளும் மறைமுகமாக ஆதரவு தருகின்றார்கள். இவர்கள் பலவேளைகளில் செய்ய முடியாமல் போகும் காரியம் (அதாவது நம்மூர் பொலீசு என்கவுண்டர் போடுறது) அனைத்தையும் தன் கையில் எடுத்து செய்து முடிக்கின்றார் பிராங்க். கள்வனைக் கண்டால் உடனே அவனுக்கு மரணத்தைப் பரிசளி என்பது பிராங்கின் மந்திர வாக்கு.

இவ்வாறு ஒருநாள் சில சமூக விரோத கும்பலை அடித்து துவைக்கும் போது ஒருத்தனை கண்ணாடி அரைக்கும் இயந்திரத்தில் போட்டு அரைக்கின்றார் நம்ம பணிசர். இவன் பின்னர் FBI முகவர்களால் காப்பாற்றப்பட்டு, எழும்பி வந்து வில்லனாகின்றான். முகம் கோரமான இவனுடன் மன நோயாளியான இவன் தம்பி வேறு சேர்கின்றான். இரண்டு பேரும் சேர்ந்து, கொள்ளையர்கள், கற்பழிப்பாளர்கள், என்று பலரையும் ஒரு குடையின் கீழ் சேர்த்து ஒரு பெரிய குழுவை உருவாக்குகின்றார். அவனுக்கு "Jigsaw" என்று ஒரு பெயர் வேறு.

இந்த ஜிக்சோவை தண்டிக்கும் நேரத்தில் வரும் ஒரு கொள்ளையனை பணிஷர் சுட வேண்டி ஏற்படுகின்றது. ஆனால் பின்னர் பார்க்கும் போது அவர் இந்த சமூக விரோதக் கும்பல் மத்தியில் ஒழிந்திருந்த ஒரு எப்.பி.ஜ முகவர் என்று தெரிய வருகின்றது. இந்த கொலையால் கோபமடையும் எப்.பி.ஜ முகவர் ஒருவர் NYPD உடன் சேர்ந்து பணிஷரைப் பிடித்து சட்டத்தின் முன்னால் நிறுத்த முனைகின்றார்.

இதேவேளை பிராங் எனப்படும் பணிஷர் தான் செய்த கொலையை எண்ணி வருந்துகின்றார். இறந்த முகவரின் குழந்தை,மனைவியிடம் அன்பாக இருக்கின்றார்.மிகுதி என்ன என்பதை வெள்ளளித் திரையிலோ, டிவிடியிலோ, திருட்டு சி.டியிலோ பார்த்து மகிழ்க.

Ray Stevenson அருமையாக நடித்துள்ளார். குரோதம் நிறைந்த தீயவர்களை மன்னிக்க மறுக்கும் பாத்திரத்தில் நன்கே பொருந்துகின்றார். அப்புறம் இந்த திரைப்படத்தை யுவனுக்குப் போட்டுக்காட்ட வேண்டும். கையில் இலக்ட்ரோனிக் கிட்டார் இருக்கு என்பதனால் என்னவும் செய்யலாம் என்பது அவர் நினைப்பு. பின்னணி இசை நெஞ்சை உருகவும் உலுக்கவும் வைக்கின்றது. வன்முறை அதிகம் நிறைந்த படம் என்பதால் குழந்தைகளுடன் பார்க்க ஏற்றபடம் அல்ல.

லேபிள்கள்: ,

Sunday, April 12, 2009

Australia (2008) விமர்சனம்

Your Ad Here

ஒரு நாட்டில் பெரும்பாண்மையாக இருப்பவர்கள்தான் அந்த நாட்டின் பூர்வீக குடிகள் என்று ஒரு கருத்து சில ஆமைகள் மத்தியில் நிலவுகின்றது. அவ்வாறு இல்லை என்பதற்கு நம் கண்முன்னே விரியும் சாட்சிதான் தற்போதைய அவுஸ்திரேலியா. அபரோஜினல் இனத்தவரே அவுஸ்திரேலியாவின் பூர்வீக குடிகள். வந்து குடியேறிய ஜரோப்பியர் இவர்களின் அடையாளத்தை அழிக்கும் பணியில் வலும் ஆர்வமாக ஈடுபட்டனர். இந்த திரைப்படத்தின் கதை ஒரு அபரோஜினோ சிறுவனை சுற்றி நகர்கின்றது. கறிக்கு மிளகாய், வெங்காயம், மிளகு போன்றவை சேர்ப்பது போல உலக யுத்தம் போன்ற சில பல விடையங்களும் திரைப்படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பூர்வீக குடியைச் சேர்ந்த தாய்க்கும் வெள்ளையின தறுதலை ஒன்றிற்கும் பிறக்கும் இரண்டும் கெட்டான் சிறுவன் நல்லாவே திரைப்படத்தின் மையம். இவனை சுற்றி ஒரு பக்கத்தில் ஒரு வெள்ளைக்கார காதலையும் அரங்கேற்றுகின்றார்கள் ஹொலிவூட் காரர்கள்.


வட அவுஸ்திரேலியாவில் கதையின் பெரும் பாகம் நகர்கின்றது. உலக யுத்தம் அதன் தாக்கம் பற்றி கதைத்தவாறே திரைப்படம் ஆரம்பித்தாலும் கதை சுழன்று அபரோஜினோ சிறுவன் நல்லாவை நோக்கி திரும்புகின்றது.

அவுஸ்திரேலியா சென்று மாட்டுப் பண்ணை நடத்தும் கணவனை மீள இங்கிலாந்து அழைத்துவர சீமாட்டி ஆஷ்லி அவுஸ்திரேலியா புறபடுகின்றார். அவுஸ்திரேலியாவின் டார்வின் எனும் நகரை வந்து சேரும் இவரை அவரது கணவரால் வேலைக்கு அமர்த்தப்பட்ட ட்ரோவர் அழைத்து செல்வதாக முடிவாகின்றது. வந்து சேரும் சாரா, ட்ரோவரை பெரும் அடி தடி மயிர்பிடி சண்டை மத்தியில் சந்திக்கின்றார்.

இவ்வாறு பல சாகங்களுடன் கணவனின் இடத்தை (Faraway Downs) அடைகின்றார் ஆஷ்லி. இங்கேதான் அபரோஜின இன சிறுவன் நல்லா மற்றும் அவனது தாயார் வசிக்கின்றனர். ஆஷ்லியின் கெட்டகாலம் அவர் வந்து சேர்ந்த நேரம் பார்த்து அவரது கணவர் மரணமாகிவிடுகின்றார் அல்லது கொலைசெய்யப்பட்டுவிடுகின்றார். அவரது கணவரது கொலைக்கு காரணம் கிங் ஜோர்ஜ் என்று அவரது கணவரின் உதவியாளர்களில் ஒருவரான ப்ளெச்சர் சொல்கின்றார். உண்மையில் அவரது கணவரில் கொலைக்கு காரணம் பிளச்சர்தான் (Fletcher), இந்த பிளச்சர் தசாவதாரத்தில் வரும் பிளச்சர் இல்லை ;)

உண்மையில் பிளச்சர் கார்ணி எனும் மற்றய ஒரு மாட்டுப்பண்ணை முதலாளியிடம் விசுவாசமாக இருந்து சாராவின் கணவரின் மாடுகளைத் திருடிவருகின்றான். இவை அனைத்தும் அபரோஜின சிறுவன் நல்லா மூலம் சாரா அறிந்து கொள்கின்றாள். இதனை அடுத்து பிளச்சரை அவனது வேலையில் இருந்தும் விரட்டி விடுகின்றாள்.

இதன் பின்னர்தான் படம் சூடுபிடிக்கத்தொடங்குகின்றது. மாட்டு வியாபாரம் அது இது என்று கதை நீள்கின்றது. இதற்கிடையே சிறுவன் நல்லாவிற்கு சாராவிற்கும் இடையில் தாய் மகன் போன்ற உறவு உருவாகின்றது. அதே போல் சாராவும் அவரை அவரது கணவரிடம் கூட்டிவந்த ட்ரோவரும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கத்தொடங்குகின்றனர்.

திரைப்படத்தின் மிகப் பெரிய பின்னடைவு அதன் நீண்ட கதை. திரையரங்கில் பலரும் அவர்கள் பேசும் அவுஸ்திரேலிய ஆங்கல உச்சரிப்பு புரியவில்லை என்று முனகுவது கேட்டது. நமக்கும் அப்படித்தான், பிறகு வந்து விக்கிப்பீடியாவில் கதையை வாசித்தமாக்கும். ;)

காட்சிகள் பிரமாதம், அருமையான ஒளிப்பதிவு. கட்டாயமாக இந்த திரைப்படத்தைப் பாருங்கள். இது உங்களை ஏமாற்றாது, ஆனால் 100 திருப்திப் படுத்தும் என்று நான் வாக்குறுதி வழங்க மாட்டேன்.

லேபிள்கள்: ,

Thursday, April 09, 2009

The Invasion (2007) விமர்சனம்

Your Ad Here
வேற்றுக் கிரக வாசிகள் பல வேசங்களில் வந்து பூமிக்குசவால்விடும் திரைப்படங்கள் பலவற்றைப்பார்த்திருக்கின்றோம். இவ்வாறாக இது வரை வெளிவந்தஹொலிவூட்திரைப்படங்களைப் பட்டியல் போடப் போனால்அது மோசமாகநீளும். அந்த வரிசையில் ஒரு திரைப்படம். ஒருவேற்றுக் கிரகவாசியையோ அல்லுது ஒரு பறக்கும்தட்டையோ காட்டாமல் ஒரு திரைப்படம்எடுத்திருக்கின்றார்கள். இந்தக் கதையில் வேற்றுக் கிரகவாசிகளுக்குப் பதிலாகபூமிக்கு வெளியே இருந்து வரும்வைரசுக்கள் மனிதனைஆட்டிப்படைப்பதையும் அதன் மூலம் மனிதர் அடையும்பிரைச்சனைகளையும்இந்த திரைப்படம் காட்டுகின்றது.



விண்ணில் இருந்து ஒரு நாசா அனுப்பிய ஒரு விண்கலம் பூமியின் ஈர்ப்பு வட்டத்தினுள் நுழைகின்றது. ஆனால் கெட்டகாலம் அந்த விண்கலம் அமெரிக்க வான் பரப்பில் உடைந்து சிதறிவிடுகின்றது. அவசரமாக அமெரிக்க அரசு அந்தப் பாகங்களை யாரும் தொட வேண்டாம் என்று கட்டளையிடுகின்றது. அவசரக்குடுக்கைகளான அமெரிக்கர்கள் அந்தப் பாகங்ளைத் தொட்டுத் தொலைக்கின்றனர். அந்த சிதறிய பாகங்களில் இருந்து வைரசுக்கள் பரவத் தொடங்குகின்றது.

சாதாரணமாக அமெரிக்க திரைப்படங்களில் வரும் வைரசுக்கள் பயங்கரமாக இருக்கும். மனிதரை இரத்த வெறிகொண்டவராக மாற்றக்கூடியவையாக இருக்கும். ரெசிடன் ஈவில் போன்ற திரைப்படங்கள் உங்களுக்கு ஞாபகத்திற்கு வரலாம். ஆனால் இந்த திரைப்படத்தில் வரும் வைரசுக்கள் மனிதருக்கு அப்படியொன்றும் மோசமான செயலை செய்யவில்லை. மனிதர்கள் யாவரையும் ஒரு அணியில் சேர்க்க உதவத் தொடங்குகின்றது. மனிதர்கள் ஒருத்தரை ஒருத்தர் வெறுப்பதற்குப் பதிலாக ஒருத்தரை ஒருத்தர் விரும்பத் தொடங்குகின்றனர்.

வைரசு தொற்றுக்குள்ளானவர் உடனடியாக அந்த வைரசுக்கு அடிமையாக மாட்டார். வைரசு தாக்குதலுக்குப் பின்னர் கொள்ளும் முதலாவது நித்திரையின் பின்னரே வைரசு தாக்கத்திற்கு உள்ளாவர். அத்துடன் வைரசு தாக்கத்திற்கு உள்ளானவர்கள் தம்மிடம் இருக்கும் வைரசை மற்றவர்களுக்குப் பரப்பும் முயற்சியிலும் ஈடுபடுவர்.

இத்தனை பிரைச்சனை மத்தியிலும் இந்த வைரசில் இருந்து தன் மகனைக் காப்பாற்றவும், வைரசின் பிடியில் செயற்படாமலும் இருக்க ஒரு பெண் (Nicole Kidman) எடுக்கும் முயற்சியைச் சுற்றி கதை நகர்கின்றது.

தன் முன்னாள் கணவரிடம் இருந்து வைரசை பெற்றுக் கொள்ளும் இந்த தாயார் தான் நித்திரைகொண்டால் வைரசின் தாக்கத்திற்கு அடிமையாகிவிடுவோம் என்று நித்திரைகொள்ளாமல் ஓடித்திரிவார்.

இப்படி போகும் கதையில் கிட்டத்தட்ட மனிதர்கள் தம் சுயத்தை இழக்கின்றார்கள். அதாவது ஒருத்தரை ஒருத்தர் அடித்துப் போடும் பழக்கம். இந்த வைரசின் பிடியில் இருந்து எவ்வாறு மீள்கின்றார்கள் மற்றும் அந்த தாய்க்கும் குழந்தைக்கும் என்ன ஆனது என்பது மிகுதிக்கதை.

கசினோ ரோயல் ஜேம்ஸ்பாண்ட் இந்த திரைப்படத்திலும் நாயகனாக நடிக்கின்றார். விறுவிறுப்பிற்கு குறைவில்லை ஆயினும் அமெரிக்க நேயர்கள் இந்த திரைப்படம் தங்களை ஏமாற்றிவிட்டதாகவே கூறுகின்றனர்.

நேரத்தைக் கொல்ல பார்க்க கூடிய ஒரு திரைப்படம்.

லேபிள்கள்: ,

Tuesday, March 24, 2009

Pineapple Express (2008) விமர்சனம்

Your Ad Here

அடி தடி வெட்டுக்கொத்து இப்படியான அக்சன் காட்சிகள் மசாலா போல சேர்த்திருந்தாலும் ஹிக்...ஹிக்... என்று குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் திரைப்படம். பல ஆண்டுகளுக்கு முன்னர் பரீட்சிக்கப்பட்ட ஒரு போதை மருந்துதான் Pineapple Express. இது தற்போதைய காலத்தில் போதைப்பொருள் சந்தைக்கு வந்துவிடுகிறது. இதை வாங்கிப் பாவித்ததால் டேல் டென்டோன் (Seth Rogen) எனும் நபர் அடையும் குளப்பங்களை நகைச்சுவையாக காட்டியதே இந்த திரைப்படம். உண்மையில் இந்த வகைப் போதைப்பொருளை முதலாவதாக சந்தையில் பெற்றுக்கொள்பவர் இந்த டேல் மகராசன் தான். இதனால் போதைப் பொருள் கடத்தல் காரர்களுக்கு டேல் மற்றும் அவனது காதலி வீடு என்பவற்றை கண்டறிய கஷ்டம் இருக்கவில்லை.




இந்த டேல் ஒரு சட்ட நிறுவனத்தின் slacker ஆகப் பணிபுரிகின்றார். கிடைக்கும் நேரங்களில் மரிஜூவானா ஊதி தள்ளுவார். நடுத்தர வயதை சேர்ந்த இவர் ஒரு உயர் பள்ளிக்கூட (High School) மாணவியை டேட்டிங் செய்கிறார் என்பது கொடுமை. அதைவிட அந்தப் பெண் பலதடவை தன் பெற்றோரை வந்து சந்திக்கச்சொல்லியும் பயம் காரணமாக இவர் சந்திக்காமல் தவிர்த்து வருகின்றமை அதிலும் பெரிய கொடுமை.

வழமை போல ஒருநாள் இவரது பிரியமான போதைப் பொருள் விற்பனையாளரான Saul ஐ சந்திக்கச் செல்கின்றார். அவன் புதிதாக வந்துள்ளதாக இந்த பைன்னப்பிள் எக்ஸ்பிரஸ் எனும் போதைப் பொருளை அறிமுகம் செய்து வைக்கின்றார். அதை புகைத்தவாறு தனது அடுத்த கிளையன்டின் வீட்டு வாசலில் நிற்பவர் ஒரு திடுக்கிட வைக்கும் காட்சியைக் காண்கின்றார்.

டெட் எனும் அந்த கிளையன்டும் மற்றுமொரு கெட்ட பொலீஸ்காரியும் சேர்ந்து ஒரு ஆசிய இன ஆடவனை கொலை செய்கின்றனர். இதை பார்த்துவிடும் டேல் உணர்ச்சிவசப்பட்டு தனது காரின் முன்னாலும் பின்னாலும் நிறுத்தி வைத்திருக்கும் வாகனத்தை இடி இடி இடி என்று இடித்து தள்ளிவிட்டு தப்பி ஓடுகின்றார்.

டெட் மற்றும் கெட்ட பொலீஸ்காரி வெளியே வந்து பார்க்கும் போது டேல் பைனபில் எக்ஸ்பிரசையே புகைத்துக்கொண்டிருந்தான் என்பதைக் கண்டறிகின்றனர். இந்த பைனபிள் எக்ஸ்பிரசை இப்போ வினயோகிப்பவனே இந்த டெட்தான். தனது மொத்த விற்பனையாளரை மடக்கி அவன் மூலம் சில்லறை விற்பனையாளனை முடக்கி, தான் செய்த கொலையைப் பார்த்த சாட்சியை மடக்க டெட் முயற்சிக்கிறான்.

டெட் இவ்வாறு முயற்சிக்கலாம் என்று தெரிந்து கொண்ட டேலும் Saulஉம் ஓடுகின்றார்கள் ஓடுகின்றார்கள் அமெரிக்காவின் எல்லைக்கே ஒடுகின்றார்கள். இதன் பிறகு எப்பிடி இந்தப் பிரைச்சனையில் இருந்து தப்பினார்கள் என்பது மிகுதிக் கதை.

ஆகா ஓஹோ என்று நகைச்சுவையில்லாவிட்டாலும் Zack and Mihiri make Porno போன்ற திரைப்படங்களை விட நூறுமடங்கு சிறந்த திரைப்படம் இது. Zack and Mihiri Make Porno திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் Seth Rogen தான் இந்த திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார்.

நீண்ட நாளைக்குப் பிறகு பரவாயில்லாமல் ஒரு நகைச்சுவைத் திரைப்படம் பார்த்த திருப்தி மனதில்.

லேபிள்கள்:

Friday, March 20, 2009

Ring of Death (2008) விமர்சனம்

Your Ad Here

சிறைச்சாலையின் வார்டன் தன் கட்டுப்பாட்டில் சிறைச்சாலையை வைத்திருந்து அட்டகாசம் செய்வது போலக் காட்டும் திரைப்படங்கள் பலவற்றைப் பாத்திருக்கின்றோம். அவ்வகையில் அமைந்த ஒரு திரைப்படமே இது. இதே போன்று டெத் ரேஸ் எனும் திரைப்படமும் கடந்த வருடம் எடுத்திருந்தார்கள். அந்த திரைப்படத்தில் கால்வாசி கூட இந்த திரைப்படம் இல்லை. எடுத்துக்கொண்ட விடையம் ஏதோ நன்றாக இருந்தாலும் மிக மிக மட்டமான திரைக்கதையைப் பயன்படுத்தியிருக்கின்றார்கள். பழைய மொந்தையில் புதிய கள்.



சிறைச்சாலை சுவர்களுக்குப் பின்னால் கைதிகளை மோத விட்டு அதனை இணையத்தில் Streaming முறையில் ஒளிபரப்பி பணம் சம்பாதிக்கின்றார் வோர்டன். இதனை அறிய பொலிஸ் அதிகாரி உள்ளே ஒரு கைதியாக நுழைகின்றார். அவர் இத்தனை அபாயமான செயற்றிட்டத்திற்கு ஒத்துக்கொண்டதற்கு காரணம், மகன் படிப்பு, குடும்ப நிதி நெருக்கடி மற்றும் மீள வெளியே வந்த்தும் காத்திருக்கும் FBI உத்தியோகம்.

வழமை போல எல்லா பொலீஸ் காரனையும் போல இவரும் பல பல உண்மைகளைக் கண்டறிகின்றார். எல்லாம் சுபமாக நிறைவேறுகின்றது.

ஒற்றைக் கண்ணுடன் வந்து பயமுறுத்தும் வோர்டன் Prison Break இரசிகர்களுக்குப் பரீச்சயமானவர். Fox river வோர்டனாக நடித்தவரே (Stacy Keach) இந்த திரைப்படத்திலும் வில்லன் வோர்டனாக நடிக்கின்றார்.

மோசமான பலமில்லாத திரைக்கதையில் திரைப்படம் அல்லல்படுகின்றது. சண்டைக் காட்சிகள் அருமையாகவும் இரத்த மயமாக இருந்தாலும் திரைப்படத்தை ஒரு நல்ல திரைப்படம் எனும் பகுப்பிற்குள் கொண்டுவர முடியாமல் உள்ளது.

எதுவுமே இல்லை வேற எந்த திரைப்படமும் இல்லை. வில்லு பொல்லு போன்ற திரைப்படங்கள் பார்க்கப்போவதாக இருந்தால் இந்த திரைப்படத்தைப் பாருங்கள்.

பி.கு: சில நிர்வாணக் காட்சிகளும் இருப்பதால் கவனமாக யோசித்துக் குடும்பத்துடன் பாருங்கள்.

லேபிள்கள்:

Thursday, March 19, 2009

Valkyrie (2008) விமர்சனம்

Your Ad Here

பலரும் இணையத் தளங்களில் இந்த விமர்சனத்தை எழுதியிருப்பதைக் கண்டேன் என்றாலும் என் பங்குக்கும் ஏதாவது எழுதும் ஆர்வத்தில் இந்த விமர்சனத்தை எழுதுகின்றேன். வல்கரி எனும் இந்த திரைப்படம் ஹிட்லர் காலத்தில் நடந்த ஒரு புரட்சிக்கதை. ஹிட்லருக்கெதிராக நடந்த புரட்சி. ஹிட்லருக்கு எதிராக நடந்த புரட்சி என்றதும் ஏதோ பிரஞ்சுகாரனும், பிருத்தானியா காரனும் செய்த புரட்சி என்று எண்ண வேண்டாம். இது ஹிட்லருக்கெதிராக அவரது படையில் இருக்கும் இராணுவ அதிகாரிகளால் அரங்கேற்றப்பட்ட நிகழ்ச்சி. வரலாற்றையே மாற்றியிருக்க வேண்டிய நிகழ்ச்சி இது.!!!



வட ஆபிரிக்காவில் நகரும் ஹிட்லரின் நாசிப்படைகளைக் காட்டுவதுடன் திரைப்படம் ஆரம்பிக்கின்றது. டாம் குரூஸ் ஒரு நாசிப் படை அதிகாரியாக திரைப்படத்தில் தோண்றுகின்றார். முதல் காட்சியிலேயே அவர் ஹிட்லரை எந்தளவு வெறுக்கின்றார் என்பதைக் காட்டுகின்றனர்.

யுத்த முண்ணரங்கிற்கு படைகளை நகர்த்த இருக்கும் அதிகாரியிடம் படைகளை நகர்த்துவது எவ்வளவு முட்டாள் தனம் என்று பேசி முடித்து நகர்வதற்கிடையில் நேசப் படைகளின் விமானங்கள் வந்து சேர்ந்து குண்டு மழை பொழிகின்றன. வழமைபோல அங்கும் இங்கும் ஓடித்திரியும் ஸ்டோபன்பேர்க் (Stauffenberg-டாம் குறூஸ்)தானும் காயப்பட்டுவிடுகின்றார்.




வைத்தியசாலையில் கண்விழிக்கின்றார் ஸ்டோபன்பேர்க், மனைவி அரவணைத்துக்கொள்கின்றார். ஒரு கண், வலக்கையில் சில விரல்கள் என்பன இல்லாமல் போய்விட்டன. ஊனமுற்றவரான ஸ்டோபன்பேர்க்கிற்கு பதிவியுயர்வுடன் அலுவலக வேலையொன்றும் வழங்கப்படுகின்றது.

அடிபட்ட புலியாக ஸ்டோபன்பேர்க் ஹிட்லருக்கு எதிராக செயற்படத்தொடங்குகின்றார். மெல்ல மெல்ல அதற்கு கூட்டுச்சேர வேண்டியவர்களையும் அடையாளம் கண்டு அவர்களுடன் இணைந்துகொள்கின்றார். இதன்படி இரகசியமாக ஹிட்லருக்கு எதிராக அரசியல் நடத்துவோருடன் இணைகின்றார். இவர்கள் மத்தியில் மெல்ல மெல்ல ஸ்டோபன்பேர்க் பிரபலமாகின்றார்.

இந்த கூட்டத்தின் பலனாக ஹிட்லர் இறந்தபிறகு என்ன செய்வது என்பது பற்றிய வல்கரி எனும் நடவடிக்கையை ஸ்டோபன்பேர்க் ஆவணப்படுத்தி அதில் ஹிட்லரின் கையெழுத்தையே வேண்டுகின்றார்.

Olbricht எனும் இராணுவ உத்தியோகத்தர் மற்றும் ஸ்டோபன்பேர்க் ஒன்றாக இணைந்து ஹிட்லரின் குகைக்குள் நுழைகின்றனர். அவரை குண்டுவைத்து கொலைசெயவதே இவர்களின் நோக்கம்.

இதை வாசிக்கையிலேயே உங்களுக்குப் புரியக்கூடும். இது ஒரு தோற்கடிக்கப்பட்ட நடவடிக்கை என்பது. ஏன் எனில் ஹிட்லர் குண்டு வெடிப்பில் மரணமாகவில்லை. திட்டம் பலமானதாக இருப்பினும் குண்டுவெடிப்பில் ஹிட்லர் தப்பிவிடுவதால் எல்லாம் தாறுமாறாக மாறுகின்றது. இறுதியில் புரட்சிசெய்தோருக்கு என்ன தண்டனை என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

வழமைபோல அனைவரும் டொம் குறூஸ் நடிப்பு மோசம் என்று பேசியுள்ளனர். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் மனுசன் நடிப்பில் விளாசியிருக்கின்றார். அருமையான நடிப்பு. இவருடன் இணைந்து நடித்த துணை நடிகர்களும் அருமையாக நடித்திருக்கினர்.

கட்டாயமாக அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.!

சில தொடர்பான தொடுப்புகள்
  1. குண்டு வெடிப்பின் பின்னர் ஹிட்லரின் காற்சட்டை
  2. புரட்சிவாசி ஸ்டொபன்பேர்க்
  3. IMDB தொடுப்பு
  4. உத்தியோக பூர்வ தளம்

லேபிள்கள்:

Saturday, March 14, 2009

Underworld: Rise of the Lycans (2009)

Your Ad Here

என்னவோ தெரியாது முதலாவது பாகம் பார்த்ததுமே Underworld திரைப்படம் பிடித்துப்போய் மூன்று பாகங்களையும் ஒரு நாளிலேயே பார்த்து முடித்தேன். இங்கு எழுதும் விமர்சனம் மூன்றாம் பாகத்துக்கானது.

வம்பயர்ஸ், வேர்வூல்ப் இடையில் ஜென்மத்துப் பகை. காலம் காலமாக இருவரும் ஒருத்தரை ஒருத்தர் அடித்துக்கொள்கின்றனர். சாதாரண மனிதரை வம்பயர் கடித்தால் அவர் வம்பயராவார் அல்லது வேர்வூல்ப் கடித்தால் வேர்வூல்வ் ஆவார். அத்துடன் பலகாலம் சாகாவரம் பெற்றுவாழ்வர் (Immortality).

திரைப்படத்தின் ஆரம்பமே அட்டகாசம். ஒரு குதிரைவீரன் காட்டுவழியே வருகின்றான். திடீரென அனைத்துப்பக்கங்களினாலும் வேர்வூல்ப்கள் அவனைத் துரத்துகின்றது. வழியில் தன்வழியில் குறுக்கிடும் வேர்வூல்ப்களை அடித்துவீழ்த்தியவாறே தன் கோட்டையை நோக்கித் தப்பி ஓடுகின்றான் அந்த வம்பயர் வீரன். கோட்டையினுள் நுழையும் வீரன் தன் தலைக்கவசத்தை அகற்றுகின்றான். அவன் அல்ல அவள். வம்பயர் அரசன் விக்டரின் அருமை மகள் சோன்யா. காட்சி அமைப்புகள் அபாரம். கதிரை நுனியில் உட்கார்ந்து பார்க்க வைக்க கூடிய காட்சியமைப்புகள் மற்றும் பிண்ணனி இசை.


உண்மையில் பார்க்கப்போனால் லைக்கன்சின் எழுச்சி (Rise of the Lycans) எனப்படும் மூன்றாம் பாகம் முதலாம் பாகமாக வந்திருக்கவேண்டும். லூசியஸ் எனப்படும் வேர்வூல்ப்பின் கதையே இது. சாதாரணமாக வேர்வூல்பாக மாறுபவர்கள் திரும்ப மனிதவுரு கொள்ள வாய்ப்பே இல்லை ஆனால் லூசியஸ் புதிய வலுவுடன் பிறக்கிறான். அதாவது விரும்பியபோது வேர்வூல்ப் வடிவம் கொள்ளவும் பின்னர் மனித வடிவம் கொள்ளவும் இவனால் முடிகின்றது.

முதலாம் பாகத்தில் இந்த லூசியசை நீங்கள் காணலாம் ஆனாலும் அவருடைய கதையை முழுமையாக காட்டவில்லை. மூன்றாம் பாகத்தில் தனியே லூசியசினுடைய கதையை காட்டுகின்றனர்.

வம்பயர்களின் சிறைக்கூடத்திலே பிறக்கும் இவனை முதலில் கொல்லத்துடிக்கும் வம்பயர் தலைவன் விக்டர் மனம்மாறி இவனை மையமாக வைத்து புதுத்திட்டம் தயாரிக்கின்றான். அதன்படி லூசியனை வம்பயர்கள் மத்தியில் ஒரு செல்லப்பிராணிபோல வளர்ப்பதுடன் அவனிடம் இருக்கும் அபாரமான ஆற்றலைக்கண்டு வியக்கின்றனர்.

லூசியனைப்போல பலரை உருவாக்கி வம்பயர்கள் அவர்களை காவல்நாய்களாகவும் அடிமைகளாகவும் நடத்த முடிவுசெய்கின்றனர். இதன்படி லூசியன் பசியாக இருக்கும் நேரத்தில் சாதாரண மனிதர்களை லூசியன் இருக்கும் சிறைக்கூடத்தினுள் அடைத்து வைக்கின்றனர். லூசியன் இவர்களை கடிப்பதனால் இவர்களும் லூசியனைப்போல ஒரு லைக்கன் ஆகின்றனர்.

இவ்வாறு உருவாகிய லைக்கன்கள் எவ்வாறு தமது எசமானரான வம்பயர்களை எதிர்த்து விடுதலைபெறுகின்றார்கள் என்பது மிகுதிக்கதை. சிறையில் அடைபடும் லூசியஸ் தன் சக லைக்கன் சகோதரர்களைப் பார்த்து இவ்வாறு கூவுவார்.

I've lived by their rules my entire life. I've protected them. envied them. and for what? To be treated like an animal. We are not animals! Is this want you want? We can be slaves, or we can be... LYCANS!

அருமையான நடிப்புத் திறமை அந்த மனிதரிடம். இத்தனை பழிக்குபழி வன்மம் வன்முறை மத்தியில் ஒரு அருமையான அழகான காதல் கதைவேறு இழையோடுகின்றது.

லூசியஸ் ஒரு லைக்கன், வம்பயர்களின் மூத்த தலைவர்களில் ஒருவனான விக்டரின் மகளுடன் காதல் கொள்கின்றான். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புவதுடன் காதலுக்குமேல் ஒரு படிசென்று உடலுறவுவேறு கொள்கின்றனர். இதையறியும் விக்டர் மகள்மீது தீராக்கோபம்கொள்கின்றான். சாதாரணமாக எங்கள் தமிழ் திரைப்படங்களில் வரும் சாதி பிரைச்சனைபோலவே இது.

வம்பயர்களின் பார்வையில் லைக்கன்கள் எல்லாரும் மிருகங்கள். மிருகத்துடன் தன்மகள் காதல்வயப்படுவதை எந்த அப்பன் விரும்புவான்????

இவர்கள் காதல் வெற்றிபெற்றதா இல்லையா மற்றும் லைக்கன்கள் வம்பயர்களின் கோட்டையைக் கைப்பற்றினார்களா இல்லையா என்பதை திரைப்படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்தக் கதையை காமிக்ஸ் புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள். இலவசமாக நீங்களும் வாசிக்கலாம்.

லேபிள்கள்:

Wednesday, July 30, 2008

Juno (2007) விமர்சனம்

Your Ad Here

தாய்மை என்பது அழகான ஒரு நிலை. பெண் தன் மொத்த வாழ்க்கைக் காலத்திலும் அழகாக இருப்பது இந்தத் தாய்மை அடையும் போதுதான் என்று சொல்வார்கள். இன்று ஜூனோ என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். இந்த திரைப்படம் பாடசாலையில் கல்வி கற்கும் ஒரு 15 வயது மாணவியின் கதை.

தனது பாடசாலை நண்பனுடன் உடல் உறவு கொள்வதினால் கர்ப்பம் அடைகின்றார் ஜூனோ. ஆனாலும் கர்ப்பத்தைக் கலைத்துவிட முயற்சித்து மனம் ஒத்துக்கொள்ளாமல் விட்டுவிடுகின்றார். இந்த அழகான தாய்மைப் பருவம் வயது தப்பி வருவதனால் ஏற்படும் பிரைச்சனையை இந்த திரைப்படம் அழகாக விரசம் இல்லாமல் விபரிக்கின்றது.

எங்களூரில் காதலிப்பது தெரிந்தாலே தோலுரிக்க புறப்படும் பெற்றோர் மத்தியில், அமெரிக்கப் தந்தை தன் மகள் கர்ப்பம் என்பதை சிறு அதிர்ச்சியுடன் உள்வாங்கிக் கொள்கின்றார். அத்துடன் தன் மகளின் விருப்பத்துக்கிணங்க, மகளுக்குப் பிறக்கப்போகும் குழந்தையை ஒரு தம்பதியருக்கு கொடுப்பதற்கு உதவி செய்கின்றார்.

குழந்தையை பெற்றுக் கொள்ளும் தம்பதியர் முதலில் இதில் விருப்பமாக இருந்தாலும், கணவரின் கடைசி நேர குளப்படியால் ஒரே குளப்பமாகப் போய்விடுகின்றது. இப்போது ஜூனோவின் குழந்தையை யார் பெற்றுக்கொள்வர்??? நல்ல கேள்விதான, ஆனா திரைப்படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

குழந்தையின் உண்மைத் தந்தை, ஜூனொவின் பாடசாலை நண்பன் ஜூனொவை விட்டு வேறு ஒரு பெண்ணை வெளியே கூப்பிட்டதும் ஜூனோ அடையும் குளப்பம் அடையும் கோபம் ஏமாற்றம் எங்களையும் கலங்க வைக்கின்றது.

குடும்பங்களில் சரியான வயதில் பேசப்பட வேண்டிய விடையம் திரைப்படமாக உள்ளது. என்னைப் பெறுத்த வரையில் கட்டிளமைப் பருவத்தில் இருக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம். சில காட்சிகள் குடும்பத்துடன் பார்க்க அருவருப்பாக இருக்கலாம், ஆனால் இப்படி எங்கள் குடும்பத்தில் நடந்து குளம்புவதை விட திரைப்படத்தைப் போட்டுக் காட்டி விடுவதே நன்று.

திரைப்படம் பார்த்து முடிந்ததும் நல்ல திரைப்படம் ஒன்று பார்த்த நிறைவு கிடைத்தது. கதையின் நாயகி யாரையோ நினைவு படுத்திக்கொண்டேயிருந்தார்....

லேபிள்கள்:

Tuesday, July 15, 2008

The Number 23 (2007) திரைவிமர்சனம்

Your Ad Here

எண்கள் வினோதமானவை. அவை மனிதனின் அபரிதமான வளர்ச்சியில் அரும்பங்காற்றின. எண்கள் இல்லாவிட்டால் இன்று பல கோட்பாடுகள் கொள்கைகள் இல்லாமலே போயிருக்கும். காட்டில் மனிதன் வேட்டையாடித் திரிந்திருப்பான். இவ்வாறு வினோத குணவியல்புகொண்ட இலக்கம் 23, ஒரு மனிதனின் வாழ்க்கையில் நிகழ்த்தும் நிகழ்வுகளே இந்த 23 எனும் திரைப்படம்.

வோல்டர் ஸ்பரோவ் அவனது பெயர். இவன் தொழில் நகர்பகுதியில் கட்டாக்காலியாகத் திரியும் நாய்களை பிடிப்பது. இவனது பிறந்தநாள் அன்றும் இவ்வாறு ஒரு நாய் பின்னால் சென்று அதனால் நேரம் பிந்தி அவனது மனைவியை காணச் செல்கின்றான். இவன் வரும் நேரம் பிந்தியதால் இவன் மனைவி அந்த நேரத்தில் புத்தக கடையில் ஒரு பழைய புத்தகம் ஒன்றை வாங்குகின்றாள். இரத்த சுவப்பில் எழுதப்பட்ட ஒரு மர்ம நாவல் அது அந்த நாவலின் பெயர் 23.

இந்த நாவலைப் பெறும் ஸ்பரோவ் அதனை வாசிக்கத் தொடங்குகின்றான். வாசிக்கும் போது மெல்ல மெல்ல அது தன் கதை போல இருப்பதை உணர்கின்றான். இதனை தன் மனைவி, மகனிடம் சொல்கின்றான். ஆரம்பத்தில் அவர்கள் இவன் சொல்வதை அவ்வளவாக அசண்டை செய்யாவிட்டாலும். மெல்ல மெல்ல இவன் நடத்தையில் சந்தேகம் கொள்கின்றனர்.

இந்தப் புத்தகம் ஒரு கொலைகாரனைக் கண்டறிய உதவுகின்றது. அத்த்துடன் இந்தப் புத்தகம் ஒரு தற்கொலைக் கடிதம் என்பதையும் அறிகின்றனர். தற்கொலைக் கடிதத்தை நாவலாகப் பிரசவித்துவிட்டு ஒருவன் தற்கொலை செய்கின்றான்.

இதற்கு மேல் ஒரு வரி எழுதக்கூட எனக்கு விருப்பமில்லை. நீங்களே திரைப்படத்தைப் பாருங்கள். நிசத்தில் நடக்கும் கதை, நாவலில் வரும் கதை உண்மையில் நடந்த கதை என 3 கதைகள் திரைபடத்தினுள் உள்ளடங்கியுள்ளது.

மண்டையைப் பிய்த்து பிய்து சைக்கே திரில்லர் பார்க்க விருப்பம் என்றால் இந்த திரைப்படத்தைப் பாருங்கள். நிச்சயமாக ஒரு அருமையான திரைப்பட அனுபவம் கிடைக்கும்.

லேபிள்கள்:

Friday, July 11, 2008

Butterfly Effect விமர்சனம்

Your Ad Here

பட்டர்ஃபிளை எபெக்ட் என்றால் ஒரு சிறிய மாற்றமும் பெரிய ஒரு மாற்றத்தை தோற்றுவிக்க கூடிய தன்மை உடையது எனும் பொருள்பட உள்ளதை விக்கிப்பீடியா மூலம் அறிந்துகொண்டேன். அதாவது வண்ணாத்திப்பூச்சி பறக்கும் எபெக்டு பெரிய சுனாமிவரக் காரணம் ஆகலாமாம்... ஹி..ஹி..

இந்தப்பெயரில் அமைந்த திரைப்படம் பாகம் 1 மற்றும் பாகம் இரண்டு வெளிவந்துள்ளது விரைவில் பாகம் 3 வெளிவர உள்ளது.

அண்மையில் பாகம் ஒன்றை DVD இல் பார்க்க கிடைத்தது. அருமையான திரைப்படம். பார்த்து முடித்ததும் மனம் எல்லாம் கனமாகிவிட்டது. கதை இதுதான்... ...

ஒரு சிறுவனுக்கு அடிக்கடி அவனை சுற்றி நடப்பது மறந்துவிடுகின்றது. அதாவது, ஏதாவது ஒரு செயலைச் செய்ய தொடங்குவான் பின்னர் என்ன நடந்த்து என்பது அவனுக்குத் தெரியாது. உதாரணத்திற்கு ஒரு தடவை ஆசிரியர் படம் கீறச் சொல்கின்றார், படம் கீற ஆரம்பிப்பது மட்டுமே அவனுக்கு ஞாபகத்தில் இருக்கின்றது. சிறிது நேரத்தில் ஒருத்தன் பலரை கத்தியால் குத்திக் கொலை செய்தது போன்ற ஒரு படத்தை வரைந்திருந்தான். இது பற்றி அவனுக்கு எதுவும் நினைவில் இல்லை என்பது குறிப்பிட வேண்டிய நிகழ்வு.

இது போன்ற நிகழ்வுகளில் ஞாபகம் தவறாது இருக்க, அன்றாடம் நடப்பவற்றை ஒரு குறிப்பாக எழுதிப்பேணி வருகின்றான்.

சிறிது காலம் கடந்து பல்கலை செல்லும் இந்தப் பெடியன் அங்கு ஒருநாள் சிறுவயதில் தான் எழுதிய நிகழ்வுகளை மீள எடுத்து வாசிக்கத் தொடங்குகின்றான். அதன் போது அவனுக்கு அனைத்தும் ஞாபகத்திற்கு வரத் தொடங்குகின்றது. அத்துடன் அந்த நிகழ்வு நடந்த பழைய காலத்திற்கு செல்ல கூடிய சக்தியும் ஏற்படுகின்றது. இந்த சக்தி மூலம் சிறுவயதில் நடந்த சில சில நிகழ்வுகளை இவன் மாற்றுகின்றான். சிறுவயதில் மாற்றிய சிறு நிகழ்வும் நிகழ்காலத்தில் பெரியளவு மாற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றது. அதாங்க பட்டர்ஃபிளை எபெட்டு.

இவனை சுற்றியுள்ளோருக்காக ஒவோரு தடவையும் இவன் பழைய காலத்திற்கு சென்று ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் போது அது நிகழ்காலத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

ஹொலிவூட் காரர்கள் தமக்கே உரிய பாணியில் திரைப்படத்தை எடுத்துள்ளனர். அருமையான ஒரு Sci-fi திரைப்படம். இரண்டாம் பாகம் விரைவில் பார்க்க வேண்டும்.

லேபிள்கள்:

Monday, June 30, 2008

21 (2008) விமர்சனம்

Your Ad Here

அதி புத்திக் கூர்மையுள்ள ஆறு M.I.T மாணவர்களை சுற்ற நடக்கும் கதையிது. பென் கம்பெல் எனும் மாணவன், ஹாவாட் மருத்துவ பாடசாலையில் சேர்ந்து படித்து எதிர்காலத்தில் வைத்தியராக விரும்புகின்றான். இதற்காக பலமாக படிப்பில் கவனம் செலுத்தி அதிக திறமையுள்ள மாணவனாகின்றான். சாதாரண குடும்பத்தில் பிறந்த பென் கம்பெலுக்கு 300,000 செலுத்தி ஹவார்ட் பாடசாலையில் சேர்வது கனவாகின்றது. ஆகவே அதற்காக ஒரு புலமைப் பரிசிலுக்கு முயற்சிக்கின்றான். ஆயினும் வித்தியாசமான வழமைக்கு மாறான ஒரு மாணவனுக்கு அந்த புலமைப்பரிசிலை வழங்கவே ஹவார்ட் நிர்வாகம் முயற்சிக்கின்றது.

இவனது கணித அறிவினால் கவரப்படும் மிக்கி ரோசா எனும் பேராசிரியர் இந்த மாணவனை ஒரு சிறிய 5 மாணவர்களைக் கொண்ட ஒரு கழகத்திற்கு அறிமுகம் செய்து வைக்கின்றார். இந்த குழு மைக்கினால் வழி நடத்தப்படுவதுடன், சூதாட்டத்தில் பணம் செய்வதை நோக்காக கொண்டது. முதலில் மறுத்தாலும் ஹவார்ட் நுழைவுக்குத் தேவையான பணத்தை ஈட்ட இந்த கழகத்தில் பென் இணைந்து கொள்கின்றான்.

முதலில் ஹவார்ட் பணத்திற்காக லாஸ் வெகாஸ் சென்று சூதாடினாலும் (card counting at blackjack) நாளடைவில் சூதாட்டத்தில் அவன் மனம் ஒன்றி அதில் முழுக் கவனம் செலுத்துகின்றான். இவர்கள் 6 பேரும் சேர்ந்து பெரும் பணம் செய்கின்றனர். இவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் 50 வீதம் இவர்களை இந்த இடத்திற்கு கொண்டுவந்த பேராசிரியருக்கு கொடுக்க வேண்டும் என்பதே பேராசிரியரின் கட்டளை.

ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகச் சென்றாலும் பேராசிரியர் மைக்குடன் சச்சரவு ஏற்பட்டு பென் அந்த கழகத்தில் இருந்து நீக்கப்படுகின்றான். அத்துடன் அதுவரை அவன் தன் ஹவார்ட் படிப்பிற்காக சேர்த்திருந்த பணத்தையும் மைக் களவாடி விடுகின்றான்.

இதன் பின்னர்தான் கதையின் முக்கியமான நிகழ்வுகள் நடக்கின்றன. படத்தை நீங்கள் பார்த்து என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

திரைப்படத்தில் லவ்ஸூ எல்லாம் இல்லையா என்று நீங்கள் கேட்பது கேட்கின்றது. அது இல்லாமலா? நிச்சயமாக இருக்கின்றது. பென்னிற்கு ஒரு காதலி கிடைக்கின்றார். அதே குளாமில் உள்ள ஒரு பெண்.

ஹவார்ட், MIT எல்லாம் எங்களுக்கு எட்டா உயரத்தில் உள்ள உலகத் தரத்திலான பல்கலைக் கழகம் அவற்றை திரைப்படத்திலாவது பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததே!!!

அமைதியான ஆர்ப்பாட்டம் இல்லாத, இறுதியில் மூக்கின் மேல் விரல் வைக்க தூண்டும் திரைப்படம்.

லேபிள்கள்:

ஹல்க் 2 திரையரங்குகளில்

Your Ad Here
அண்மையில் ஹல்க் 2 திரைப்படத்தைப் பார்த்தேன். அருமை. அளவிற்கு மிஞ்சி கோவப்படும்போது உருமாறி இராட்சதனாக மாறும் ஒரு மனிதனின் கதை!!!

ஹல்க் 2 விமர்சனம், விமர்சனம் தளத்தில் உள்ளது வாசித்து பயனடைக ;)

லேபிள்கள்: ,

Thursday, June 12, 2008

Indiana Jones and the Kingdom of the Crystal Skull விமர்சனம்

Your Ad Here
நேற்று கொழும்பு மஜஸ்டிக் சினிமாவில் இந்த திரைப்படத்தைப் பார்த்தேன். கல கலவென ரஜனி திரைப்படம் பார்ப்பது போல இருந்தது. இக் கதை 1950 களில் நடப்பது போல எடுக்கப்பட்டுள்ளது. ரசிய இரகசிய உளவாளிகள் இந்தியானா ஜோன்ஸைப் பயன்படுத்தி அதிசய சக்தியை பெற முயல்கின்றனர். அவர்கள் அதைப் பெற்றார்களா இல்லையா என்பதுதான் மிகுதிக் கதை.

திரையரங்கில் ஒரே குழந்தைகளாக இருந்தது, குழந்தைகளுடன் குழந்தையாக நானும் இருந்து திரைப்படத்தைப் பார்த்தேன். காட்சிக்கு காட்சி விறு விறுப்பாக நகர்வதுடன், மிக முக்கியமாக கதிரை நுனியில் உட்கார வைக்கும் காட்சியில் கூட காமெடி கலந்து கலக்கியிருக்கிறார்கள்.

குடும்பமாக சென்று வார இறுதியில் பார்க்க நல்ல திரைப்படம் ஒன்றைத் தேடுகின்றீர்கள் என்றால், இந்த திரைப்படத்தைப் பார்க்கத் தவறாதீர்கள்.

லேபிள்கள்:

Wednesday, May 28, 2008

Cloverfield திரைப்பட விமர்சனம்

Your Ad Here

உங்கள் கையடக்க் வீடியோ கமிரா மூலம் எடுக்கும் வீடியோ திரைப்படமானால் எப்படியிருக்கும். Cloverfield எனும் திரைப்படம் அப்படிப்பட்டதே.

ஒருவர் ஜப்பான் போகின்றார், அவருக்கு ஒரு விருந்துபசார வைபவம் நடைபெறுகின்றது. இதில் இருந்து வீடியோ எடுக்கத் தொடங்குகின்றார் ஒருத்தர். கையடக்க கமிராவில் பிரியாவிடை நிகழ்வை படமாக்கத் தொடங்குகின்றார். இதில் அங்கு நடக்கும் அனைத்தையும் படமாக்கும் இவர், திடீர் என்று நிவ்யார்க் நகரத்தில் நடக்கும் திடுகிட வைக்கும் நிகழ்வுகளையும் படமாக்குகின்றார். குறிப்பாக சுதந்திரச்சிலையின் தலை பறந்துவந்து இவர்கள் இருக்கும் இடத்தில் விழுதல்.

தீடீர் என்று அமெரிக்க ஜெட் விமானங்கள் பறக்கின்றன. எதையோ துரத்தி துரத்தித் தாக்குகின்றன. அமெரிக்க இராணுவ வீரர்கள் மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபடுகின்றார்கள். தரை, வான் எனப் பலவழிகளிலும் அமெரிக்க இராணுவம் தன் பலத்தை எல்லாம் பிரயோகிக்கின்றது. என்ன என்று அறியாமல் அலைபாயும் மக்கள் அவர்களுடன் அலைந்து திரியும் இந்த கமிரா காரன். என்று கதை விறுவிறுப்பாக நகர்கின்றது.

சுரங்கம் வழியாக, வீதிகள் ஊடாக, ஹெலி மூலம் என்று பல்வேறு வழிகளில் தப்ப முயற்சிக்கும் இவர்களும் இவர்களுன் விளையாடும் விதியும் கதிரை நுனியில் இருந்து திரைப்படத்தைப் பார்க்க வைக்கின்றது. கையில் இருக்கும் கமிராவினால் படம் எடுக்கப்படுவது போல பாவனை செய்ததால் திரையில் காட்சிகள் ஆடிக்கொண்டே இருக்கும். சிலருக்கு அதைப் பார்த்தால் தலை சுத்தலாம். அதுக்கெல்லாம் நான் பொறுப்பேற்க முடியாது.

ஒரு பழைய வீடியோ டேப்பின் மேல் புதிய வீடியோவைப் பதிகின்றதாகவே திரைப்படத்தில் காட்டப்படுகின்றது. ஆகவே சில இடங்களில் இடையிடையில் பொருத்தமாக பழைய டேப்பின் பதிவுகளும் வருகின்றன. இதன் மூலம் பிளாஷ் பாக்கை மிகத் திறமையாக உட்புகுத்தியுள்ளனர்.

இவர் கமிராவில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் பதியப்படுகின்றது. என்ன நடக்கின்றது என்பதைப் பற்றி நான் கூறப் போவதில்லை ஆனால் எப்படித்தான் இப்ப்படியெல்லாம் சிந்திக்கின்றார்களோ தெரியாது.

இந்த திரைப்படத்தை மிக இரகசியமாக எடுத்து திரையிட்டார்களாம். எங்கள் தசாவதாரம் போல திரைக்கதை முதலியவை வெளிவராமல் இருக்க மிகுந்த பிராயத்தனம் எடுத்தனராம். குறிப்பாக நடிகர்கள் தேர்வுசெய்யும் போதுகூட, திரைப்படத்துக்குப் பொருத்தமில்லாத சம்பந்தம் இல்லாத வசனங்களைப் பேச வைத்து நடிகர்களைத் தெரிவுசெய்தனராம்.

Sci-fi, Aciton திரைப்பட இரசிகர்களுக்கு நல்ல விருந்து. வித்தயாசமான முயற்சிகளைப் பார்த்து இரசிப்பவராக இருந்தாலும் இந்த திரைப்படத்தை நீங்கள் இரசிப்பீர்கள்.

லேபிள்கள்:

Saturday, March 15, 2008

BEOWULF - விமர்சனம்

Your Ad Here
BEOWULF என்ற திரைப்படத்தைப் பார்க்க கிடைத்தது. படம் பார்த்துக் கொண்டு இருக்கும் போதுதான் திடீர் என்று உறைத்தது, அட.. இது அனிமேஷன் திரைப்படம். என்னானாலும் பார்ப்பது என்ற முடிவுடன் பார்த்தேன். திரைப்படம் முடிந்த பின்னர் யோசித்துப் பார்த்தால், ஒரு அனிமேஷன் திரைப்படம் பார்த்த உணர்வே இல்லை. ஏதோ உண்மையான திரைப்படத்தைப் பார்த்த உணர்வே மேலோங்கி இருந்தது.

கதை அம்புலிமாமா கதைதான். ஒரு ஊரில் ஒரு இராட்சத ஜந்து இருக்கின்றது. அது ஊருக்குள் புகுந்து கொலைகளைச் செய்கின்றது, மனிதரை சப்பி சப்பிச் சாப்பிடுகின்றது. இதை தடுக்க முடியாமல் மன்னன் கலக்கமடைந்து இருக்கின்றார்.

வழமைபோல ஜந்தை அடக்க கடல்தாண்டி வருகின்றார் நாயகன் பியோவூல்ஃப். ஒருநாள் இரவு ஜந்தை மடக்கி அதனுடன் சண்டைபோட்டு அந்த ஜந்தை வெற்றிகொள்கின்றார். இதனால் கோவம் அடையும் அந்த ஜந்தின் தாயார், ஊரினுள் புகுந்து அங்கிருந்த பியோவூல்ஃப்இன் வீரர்களை கொலை செய்கின்றது.

தாய் ஜந்தை பழிவாங்க அதன் குகைக்குள் நுழையும் பியோவூல்ஃப் அங்கே ஒரு வீரன் செய்ய்க் கூடாத செயல்களை செய்வதுடன், எதிர்காலத்தில் தன்னை பெரிய அரசனாக மாற்ற சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார். இதையறியாத மன்னன் இவரை அரசனாக்குவதுடன் தன்னை மாய்த்துக் கொள்கின்றான்.

காலம் ஓடுகின்றது, மீண்டும் இவரால் உருவான புதிய ஜந்து ஒன்று (இம்முறை ட்ரகன்) ஊரினுள் புகுந்து அட்டகாசம் செய்கின்றது. இதை தற்போதைய மன்னனான பியோவூல்ஃப் எதிர்க்கின்றார். என்ன ஆனது என்பதுதான் மிகுதிக் கதை.

அனிமேஷன் அட்டகாசமாக இருக்கின்றது. அதைவிட அம்மா ஜந்து உண்மையில் ஒரு அழகான பெண். இதில் அஞ்சலீனா ஜூலி அந்தப் பாத்திரத்தை நடித்துள்ளார்.



குளந்தைகள் விரும்பி பார்க்கூடி திரைப்படமாயினும், அவர்களை திடுக்கிட வைக்கும் காட்சிகளும் இருக்கின்றது. PG 13 என்று தரப்படுத்தியிருக்கின்றார்கள். சிறுவர் போல மனம் கொண்டவர்களும், அனிமேஷனில் மனதைப் பறிகொடுத்திருப்பவர்களும் இந்த திரைப்படத்தைப் பார்க்கலாம்.

அனிமேஷனில் இத்தனை வித்தைகள் செய்யலாம் என்று கலக்கியிருக்கின்றார்கள். ஜந்துகளுடனான யுத்தம் புல்லரிக்க வைக்கின்றது.

பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் கட்டாயம் பாருங்கள்.

லேபிள்கள்: ,

Tuesday, March 04, 2008

Bee Movie, IT

Your Ad Here
பீ மூவி சிறுவர்களுக்கான அனிமேஷன் திரைப்படமாகும். பீ மூவி திரைப்படத்தின் விமர்சனம் காண விமர்சனம் வலைப்பதிவு செல்க.

IT என்ற பெயரில் ஸ்டீபன் கீங் எழுதிய நாவலின் திரையாக்கம். IT விமர்சனத்தையும் விமர்சனம் தளத்தில் காண்க.

லேபிள்கள்: , ,

Tuesday, February 19, 2008

ஆங்கிலத் திரைப்பட விமர்சனங்கள்

Your Ad Here
  1. லைசன்ஸ் டு வெட்
  2. After the sunset
  3. ட்ரான்ஸ்ஃபோமர்ஸ்
  4. ஹரி பொட்டர் 5 - திரைப்படம்

பின்வரும் திரை விமர்சனங்களை என் தமிழ் வலைப்பதிவில் காணுங்கள்!

அன்புடன்,
மயூரேசன்

லேபிள்கள்:

Thursday, March 29, 2007

23 : The Departed - விமர்சனம்.

Your Ad Here

டூம், போக்கிரி போன்ற சாதாரண இந்திய பொலீஸ், திருடன் திரைப்படங்களைப் பார்த்து புளித்துப் போனவர்கள் மாற்றாக இந்தத் திரைப்படம் த டிப்பார்ட்டட் ஐப் பார்க்கலாம். நான்கு ஒஸ்கார் விருதுகளைத் தட்டிய திரைப்படம் என்பதால் சுவாரசியத்துக்கு குறைவிருக்கும் என்று சந்தேகப் படத்தேவையில்லை. ஆஸ்காரிற்கு அப்பால் சுமார் 40 விருதுகளை இந்தத் திரைப்படம் அள்ளியுள்ளது.

உண்மையில் இந்தத் திரைப்படம் ஒரு ஹாங் ஹாங் திரைப்படத்தின் (WuJianDao – Internal Affair) மீளாக்கமாகும். ஆயினும் அத் திரைப்படத்தை விட இது சிறப்பாக இயக்கப்பட்டுள்ளதாக ஹாலிவூட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திரைப்படத்தின் நாயகன் நான் அறிமுகப் படுத்தத் தேவையில்லாதவர். அவர்தான் டைட்டானிக் நாயகன் லியனார்டோ டிக்காப்பிரியோ. படிப் படியாக உயர்ந்து நடிப்பில் தடம் பதித்து வருகின்றார் டிக்காப்பிரியோ.

பாஸ்டன் நகரத்தில் ஐரிஷ் ரவுடிக்கும்பலிற்கு பொலீசார் வலை வரிப்பதுதான் இந்தக் கதை. இதில் நாயகன் (Billy Costigan) திருட்டுக்கும்பலினுள் தானும் ஒரு திருடன் போல பாவனை செய்துகொண்டு உள்நுழைகின்றார். மற்றப் படங்கள் போலல்லாமல் இங்கு உள்நுழையும் டிக்காப்பிரியோ விருப்பம் இல்லாமலே இந்த பணியை ஏற்றுக் கொள்கின்றார். அவர் அடையும் மனக் குழப்பங்கள், வேதனைகள் என்பவற்றையும் திரைப்படத்தில் உள்ளடக்க முயன்றுள்ளனர்.

டிக்காப்பரியோ போலவே திருட்டுக் கும்பலும் தன்னுடைய நபர் (Colin Sullivan) ஒருவரை பொலீஸ் பிரிவினுள் வைத்திருக்கின்றது. பொலீஸ் திணைக்களத்திற்குள்ளேயே திருட்டுக் கும்பலுடன் பணி புரிவது யார் என்று தெரியாவிட்டாலும் இரண்டு அதிகாரிகளுக்கு டிக்காப்பிரியோதான் அந்த பொலீஸ் காரன் என்பது தெரியும். இந்த விடயத்தை தானும் அறிந்துகொள்ள சுலைவனும் முயல்கின்றான்.

யார் யாரை வென்றார்கள் திருட்டுக் கும்பல் ஒழிக்கப்பட்டதா இல்லையா என்பது மீதிக் கதை. கடைசி சில நிமிடங்கள் எதிர் பாராத திடீர் டுமீல் கள் நிறைந்து இருக்கின்றது. அத்துடன் திரைப்படங்களுக்கு மிக முக்கிய பகுதியான ஒரு மெல்லிய குழப்பமான காதலும் இழையோடுகின்றது.

படத்தில் சில காட்சிகள் ஏன் என்றே புரியவில்லை. உதாரணமாக படத்தில் வில்லன் பெரும் சர்வதேசப் புகழ் கடத்தல் காரன் என்றால் எதற்காக உள்ளூர் கடைகளில் சென்று பணம் வசூலித்துக்கொண்டு திரிகின்றான்?. அத்துடன் பில்லி காஸ்டிகனை (டிக்காப்பிரியோ) இலகுவாக நம்பி குழுவினுள் ஏற்று விடுவதாகக் காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இத்திரைப்படத்தில் GOODFELLAS என்ற திரைப்படத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும் பேசிக்கொள்கின்றார்கள். திரைக்கதை வசனம் எழுதியவர் தான் சீனப் படத்தைப் பார்க்கவே இல்லை என்று மார்தட்டிக் கொண்டாலும். இரண்டு படங்களையும் பார்த்தவர்கள் திரைக் கதை வசனம் சீனத் திரைப்படத்தை ஒத்து இருப்பதாகவே கூறியுள்ளனர்.

படம் மிக வன்முறை நிறைந்தது என்பதுடன் வார்த்தைப் பிரையோகங்கள் மிக மிக மோசமாக இருக்கின்றது (F*** என்பதை நிமடத்திற்கு ஒரு தடவை சொல்வது திரைப்படத்தை இரசிக்கச்செய்வதற்குப் பதிலாக வெறுப்பேற்றுகின்றது). ஆகவே குழந்தைகளுடன் உட்கார்ந்து பார்க்கக்கூடிய படம் இல்லை.

தூக்கம் வராத நேரத்தை ஏதாவது பார்த்து கழிக்க நினைத்தால் இந்தத் திரைப்படம் நல்ல ஒரு தெரிவு!!!!

அன்புடன்,
ஜெ.மயூரேசன்.

லேபிள்கள்: ,