ஹாலிவூட் பார்வை

கிழக்கில் இருந்து மேற்கைப் பார்க்கின்றேன்

A Cat in Paris (2010)

கார்டூன் திரைப்படங்களை நாம் பொதுவாக இரசித்துப் பார்ப்பதுண்டு. இன்று வெளியாகும் பல ஹாலிவூட் திரைப்படங்கள் கார்ட்டூன் திரைப்படங்களாக இருப்பதை நாம் காணலாம். குங்பு பண்டா, டின் டின், டோய் ஸ்டோரி, ஷ்ரெக் என்று பட்டியல் நீளம்.

ஆனால் இந்த அ கட் இன் பரிஸ் எனும் கார்ட்டூன் திரைப்படம் வித்தியாசமானது. சிறுவயதில் இரசிய மொழிபெயர்ப்பு சிறுவர் புத்தகங்கள் படித்திருகின்றீர்களா? உ+ம் நெருப்புப் பறவை போன்றவை?? இந்த பிரஞ்சுக் கார்ட்டூனில் வரும் சித்திர அமைப்பு ஏனோ அதையே எனக்கு ஞாபகப் படுத்தியது.

ஒரு தொழில்முறை திருடன் அவனுடன் ஒரு பூனை அவன் செல்லும் இடம் எல்லாம் செல்கின்றது. நகரின் மறுபக்கம் ஒரு பொலீஸ் அதிகாரியும் அவளின் மகளும். இந்தப் பெண் பொலீஸ் காரியையும் சிறுமியையும் வில்லனையும் திருடனையும் ஒரு கோட்டில் இணைப்தற்கு இந்தப் பூனை பயன்படுகின்றது.

வித்தியாசமான சித்திரங்களையும் அதனோடு ஒட்டிச் செல்லும் கதையும் மனதை வருடிச் செல்கின்றது.

இந்த கிருஸ்மஸ் விடுமுறைக்கு குடும்பமாக இருந்த டிவிடியில் போட்டுப் பார்க்க ஒரு நல்ல திரைப்படம். கட்டாயம் பார்க்க வேண்டிய கார்ட்டூன் திரைப்படம்.

புள்ளி 80/100

posted by மயூரேசன் in அனிமேசன் திரைப்படம்,சினிமா,திரைவிமர்சனம் and have Comments (2)

2 Responses to “A Cat in Paris (2010)”

  1. Lucky Limat says:

    அருமையான படத்தை அறிமுகபடுத்தியதற்கு நன்றி நண்பரே

  2. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி லிமட் :)

Place your comment

Please fill your data and comment below.
Name
Email
Website
Your comment