ஹாலிவூட் பார்வை

கிழக்கில் இருந்து மேற்கைப் பார்க்கின்றேன்

Archive for August, 2010

Robin Hood (2010) விமர்சனம்

ஏழைகளிடம் திருடி பணக்காரனிடம் கொடுப்பவன் துரோகி. பணக்கானிடம் இருந்து திருடி ஏழைகளிடம் கொடுத்தால் அவன் ஹீரோ. இவ்வகையான ஹீரோக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் ஏழைகளின் தோழன் ரொபின் ஹூட். ரொபின் ஹூட் நொட்டிங்காம் எனும் பிரதேசத்தில் வாழ்ந்து அங்கே மக்களுக்கு எதிராக கொடுங்கோல் ஆட்சி புரிந்த செரீபை எதிர்த்து மக்களுகுச் சேவை செய்ததாக வரலாறு.

இவ்வகையில் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் வெளிவந்துள்ளன. என் உள்ளத்தை என்றும் விட்டு நகராத ரொபின் கூட் தொலைக்காட்சித் தொடர் 80களில் வெளியானது பின்னர் இலங்கை ரூபவாகினியில் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் 90 களில் ஒளிபரப்பானது.

இலங்கையில் உள்ள எந்த வொரு குழந்தையும் அக்கால கட்டத்தில் இந்த ரொபின் கூட் தொலைக்காட்சித் தொடரைப் பார்க்காமல் இருந்திருக்க முடியாது. ரொபின் கூட்டினால் உந்தப்பட்டு மரத்தில் வாள் தீட்டியதையும் ஈர்க்கில் எடுத்து அதில் அம்பும் வில்லும் செய்து குருவியை சரி குறிவைத்து அடிக்க முயன்றதும் மறக்க முடியாத காலங்கள். இதைப் பற்றி சில இலங்கைப் பதிவர்கள் கூட பதிவிட்டிருந்தார்கள்.

இந்த ரொபின் கூட் தொலைக் காட்சித் தொடரில் நடித்த பலரும் திரைப்படங்களில் நடிப்பதில்லை. ஹீரோ வாக இரண்டு ரொபின்கள் வருவார்கள். முதல் பாகத்தில் வரும் ரொபின் கொலை செய்யப்பட்ட பின்னர் ரோபேர்ட் எனும் ஒரு பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருத்தர் வருவார். அவர் மீளவும் ரொபினின் கூட்டத்தை ஒன்றிணைப்பார்.

80 களின் வெளியான தொலைக்காட்சி ரொபின்

திரைப்பட விமர்சனம் என்று ஆரம்பித்து தொலைக்காட்சித் தொடர் விமர்சனம் அல்லவா செய்கின்றேன். ;)


நகர் வலம் செல்லும் லேடி மரியன் & ரொபின்

நகர் வலம் செல்லும் லேடி மரியன் & ரொபின்

இங்கனம் ரொபின் கூட்டின் தோற்றம் வரலாறு பற்றிப் பலவிதமான கருத்துக்கள் கதைகள் உலாவுகின்றன. சிலர் ரொபின் கூட் என்று ஒரு நபர் இருந்ததே இல்லை என்கின்றார்கள் ஆனால் நிச்சயமாக இருந்தார் என்று இன்னுமொரு கூட்டம் அடித்துச் சொல்கின்றது.

எது எவ்வாறாயினும் இந்த திரைப்படம் ரொபின் கூட்டின் வரலாறு பற்றிப் புதுக் கதை கூறுகின்றது. பேசாமல் இந்த திரைப்படத்திற்கு Origin of Robin Hood என்றோ Rise of Robin Hood என்றோ வைத்திருக்கலாம். பலரும் ரொபின் கூட் துரோகியாக அக்சன் பண்ணுவார் என்று எதிர்பார்க்கும் போது ரொபின் எப்படித் தோன்றினார் என்று மட்டுமே இங்கே காட்டப்படுகின்றது. இதனால் தான் என்னவோ பல இரசிக உள்ளங்களுக்கும் இந்த திரைப்படம் பிடிக்கவில்லை.

இரண்டாம் சிலுவை யுத்தம் நடத்த புனித பூமி சென்று திரும்பும் வழியில் நடக்கும் யுத்தம் ஒன்றில் இங்கிலாந்தின் மிகப் பெரிய மன்னன் சிங்க மனசுக் காரன் ரிச்சார்ட் (Richard the Lion Heart) பலியாகி விடுகின்றான். ரிச்சாட்டின் படையில் வில்வித்தையில் தேர்ந்த போர் வீரனாகப் பணியாற்றுகின்றான் ரொபின்.

அரசனின் மரணத்தின் பின்னர் நடக்கும் சில நிகழ்வுகளினால் அரசனின் முடி மற்றும் லொக்ஸ்லி பிரபுவின் மகனின் உடைவாள் என்பன ரொபின் கைகளில் மாட்டி விடுகின்றது. இதை மீள உரியவர்களிடம் ஒப்படைக்கத் திட சங்கர்ப்பம் பூண்டு புறப்படும் ரொபின் இங்கிலாந்தின் வரலாற்றையே மாற்றி அமைக்கப்போகும் யுத்தத்தில் நேரடியாகப் பங்கு பெறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றான். இங்கிலாந்தின் துரோகி கொட்பிரேயையும் எதிர்க்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றான்.

இறுதி யுத்தத்தில் ரொபின்

இறுதி யுத்தத்தில் ரொபின்

கதையை முழுமையாகச் சொல்லாமல் சொதப்பலா சொல்லியிருக்கன் அப்போதுதான் நீங்கள் திரையிலோ டிவிடியிலோ பார்க்கும் போது அருமையாக இருக்கும்.

இந்த திரைப்படம் மேல் பெரும் ஆர்வர் மேலிட இன்னுமொரு காரணமும் இருந்தது. கிளாடியேட்டர் திரைப்படத்தை இயக்கி பெரும் பாராட்டுக்களைக் குவித்த அதே இயக்குனர் அதே நாயகன் றசல் குரோவை வைத்து இயக்கிய திரைப்படம். ஆதலினால் திரைப்படம் பற்றிக் கடும் எதிர் பார்ப்பு மக்களிடம். கிளாடியேட்டர் திரைப்படத்தை இயக்கிய ரிட்லியின் பிரமாண்டத்தை இங்கேயும் காணலாம் குறிப்பாக பிரஞ்சுப் படைகளை ஆங்கிலப் படைகள் எதிர்கொள்ளும் காட்சி.

அமெரிக்க திரைப்பட வரிசையில் கிடு கிடு என கீழே இறங்கி விட்டாலும் பிரித்தானியாவில் தர வரிசையில் மேலே சில காலம் நின்றது. அவர்கள் ஊர் லெஜண்ட் பற்றிய கதை என்பதால் என்னவோ அவர்கள் பிடித்து நிறுத்திவிட்டார்கள்.

தானைத் தலைவன் ரசல் குரோவிற்கு இப்போது வயது 45ஆம். இந்த வயதில் இது தேவை தானா என்று கேட்கின்றார்களாம். அப்படியானால் 65 வயதில் அவருக்கு ஐஸ்ஸூ தேவையா?? ஹி..ஹி.. :) ரொபின் பாத்திரத்தில் இது வரை நடித்தவர்களில் ரசல் குரோவிற்குத்தான் வயது கூடவாம்.

இதே வேளை பட்மான், டேர்மினேட்டர் போன்ற திரைப்படங்களில் நடித்த கிரிஸ்டியன் பேலையும் ரொபின் கூட் பாத்திரத்தில் நடிக்க வைக்க முயன்றார்கள் என்று கூறப்படுகின்றது. அம்மா மகமாயி எங்கள காப்பாத்திட்டே… நன்றி. பேல் கிட்ட டர்மினேட்டரிலயே அறுபட்டது போதும். :)

என்னைப் பொறுத்தவரையில் அருமையான திரைப்படம். இரசிக உள்ளங்கள் இரசிக்கலாம்.

MY RATING: 75/100
IMDB RATING: 70/100

posted by மயூரேசன் in சினிமா,திரைவிமர்சனம் and have Comments (12)

Salt (2010) விமர்சனம்

கொஞ்ச நாளாகவே திரைப்படம் பார்த்தால் ரொம்பவும் வெறுப்பாக இருக்கின்றது. புதிதாய் வரும் திரைப்படங்களிற்குப் பதிலாக சுறா மற்றும் வில்லு போன்ற லொள்ளு வஜையின் படங்களை… சீ.. சீ.. விஜயின் படங்களைப் பார்த்துவிடலமோ என்று தோன்றுகின்றது. இன்று வேலைக்கு கல்தா கொடுத்துவிட்டதால் அமைதியாக இருந்து பெரிய எதிர்பார்ப்பில்லாமல் இந்த சோல்ட் படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். எதிர்பார்ப்பு இல்லாமல் பார்க்கத் தொடங்கியதால் என்னவோ படம் ஓரளவு திருப்தியாகவே அமைந்தது.

பனி யுத்தக்காலத்தில் அமெரிக்காவும் றுசியாவும் முட்டிக்கு முட்டி மல்லுக் கட்டிக்கொண்டி இருந்தன. ஒருத்தரை ஒருத்தர் அணுவாயுதம் கொண்டு அழித்துவிடுவதாககூட மிரட்டினர். இப்படியான பனி யுத்தக் காலத்தில் ஆரம்பிக்கும் கதை இன்றைய காலம் வரை வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் கதை.


நீறு பூத்த நெருப்பாக றுசிய உளவாளிகள் அமெரிக்க மண்ணில் இருக்கின்றார்கள். காலம் வரும் போது சர்வ நாசம் செய்து தம்மை அடையாளம் காட்டுவர் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தப் படுகின்றது.

அஞ்சலீனா ஜூலி இந்த திரைப்படத்தில் சோல்ட் ஆக நடிக்கின்றார். அவர் ஒரு சி.ஐ.ஏ உளவாளி திரைப்படம் ஆரம்பத்திலேயே வட கொரிய சிறைச்சாலையில் வைத்து நையப் புடைக்கப்படுகின்றார். பின்னர் கைதிகள் பரிமாற்றம் மூலம் மீள அமெரிக்கா வந்து சேர்கின்றார்.

ஒரு நாள் இவர்களின் அலுவலகத்தினுள் நுழையும் ஒரு றுசிய நபர் சோல்ட் எனும் பெண் விரைவில் அமெரிக்கா வரவிருக்கும் றுசிய அதிபரை போட்டுத்தள்ளப்போவதாகக் கூறுகின்றார். அவர் சொன்ன சோல்ட்தான் நாம் பார்த்த ஹீரோயின் அஞ்சலீனா. இதைக் கேட்டு பதகளித்து தப்பி ஓடி அஞ்சலீனா என்ன செய்தார் என்பதை காட்டியுள்ளார்கள் மிகுதித் திரைப்படம் முழுவதும்.

கதையின் மையப் பாத்திரங்கள் சோல்ட் (அஞ்சலீனா), லீவ் ஸ்கிரைபர் (இவர் தான் வூல்வரீனின் அண்ணா சைபரூத்தாக வருபவர்), Chiwetel Ejiofor (மற்றோரு CIA அதிகாரி) ஆகியோரைச் சுற்றி நகர்கின்றது.

அஞ்சலீனா ஜூலியை டொம் ரைடரில் பார்த்த காலத்தில் இருந்தே இயந்திரத் துப்பாக்கி, நெருப்பு, புல்லட்டு என்று பார்த்தால் அவருடன் ஒட்டிவிடுகின்றது. அவரிற்கு ஏற்ற பாத்திரத்தை அருமையாகச் செய்துள்ளார்கள். இறுதி வரை இவள் என்ன மண்ணாங்கட்டி செய்றாள் என்றே தெரியாது. படம் ஒரு 75 வீதம் ஓடியபின்னரே கதை ஓரளவு புரியத் தொடங்குகின்றது.


படங்கள் வெறுத்து எதைப் பார்ப்பது என்று இருந்தால் இந்த திரைபடம் நிச்சயம் உங்களுக்கு ஆறுதல் தரும். அட்லீஸ்ட் தலையிடி தரும் ;)

My Rating: 65/100

IMDB Rating: 67/100

posted by மயூரேசன் in சினிமா,திரைவிமர்சனம் and have Comments (7)

மரண மாளிகை – ரிப்போட்டர் ஜானி

புத்தக அட்டை

அண்மையில் சில காமிக்ஸ் புத்தகங்களை கையகப்படுத்தியிருந்தேன். அவற்றை ஒன்று ஒன்றாக வாசித்து இங்கே குறும் பதிவுகளாக இடும் உத்தேசம். அவ்வகையில் இன்று வாசித்துப் பதிவு இடப் போகும் புத்தகம் ரிப்போட்டர் ஜானி தோன்றும் மரண மாளிகை.

நாம் பல ரியாலிட்டி ஷோக்களைப் பார்க்கின்றோம். உதாரணத்திற்கு சொல்லப்போனால் ஜோடி நம்பர் வன், சுப்பர் சிங்கர் என்று பல. அதே போல வெளி நாடுகளிலும் ரியாலிட்டி ஷோக்கள் பிரபலம். அண்மையில் நம் ஷில்பா ஷெட்டி பிக் பிரதர் எனும் நிகழ்ச்சியில் கலந்து கண்ணீரும் கம்பலையுமாக இருந்தார் ஞாபகமா?? அது கூட ஒரு ரியாலிட்டி ஷோவேதான். எங்கள் கதையும் இப்படியான ஒரு ரியாலிட்டி ஷோவை சுற்றியே நடக்கின்றது.

பெந்தோசு மாளிகையில் ஒரு ரியாலிட்டி ஷோ அங்கே அடுத்தடுத்து மர்மமான முறையில் கொலைகள். இதைத் துப்பறிய எங்கள் ரிப்போட்டர் ஜானி களம் இறங்குகின்றார். மெல்ல மெல்லமாக முடிச்சுகளை அவிழ்கின்றார். இறுதியில் எதிர் பாரா ஒரு வில்லன் வந்து அமைந்து விடுகின்றான்.

கதை வேகம் என்னவோ மிகவும் மந்தம்தான்.  நான் ரிப்போட்டர் ஜானியின் கதைகளுக்கு பெரிய விசிரியாக இருந்ததில்லை. ஆனாலும் கிடைக்கும் போது வாசித்துவிடுவேன். ரிப்போட்டர் ஜானி மார்ச் 3, 1955 இல் பிறப்பெடுத்திருகின்றார். ரின் ரின் எனும் காமிக்ஸ் புத்தகத்தில் இவர் வந்திருகின்றார் முதன் முதலாக. தமிழில் ரிப்போட்டர் ஜானி என்று அறியப்பட்டாலும் தலை ஆங்கிலத்தில் Ric Hochet என்றே அறியப்படுகின்றது.

இப்படியான காமிக்ஸூகளை ஆங்கிலத்தில் கூடத் தேடிப் பிடிப்பது கடினம். எங்கள் பாக்கியம் லயன் முத்து காமிக்ஸ் பதிப்பகத்தார் தமிழில் வெளியிடுகின்றமை.

posted by மயூரேசன் in காமிக்ஸ் and have Comments (6)

டெக்ஸ் தோன்றும் இரத்த ஒப்பந்தம்

டெக்ஸ் வில்லரின் சாகசங்களை வாசிப்பதில் கிடைக்கும் திருப்தியே தனிதான். அவ்வகையின் அண்மையில் டெக்சின் ஒரு சாகசத்தை வாசிக்க கிடைத்தது. வருந்தத்தக்க விடையம் என்னவெனில் இந்தப் புத்தகம் மொத்தம் மூன்று பாகங்களாக வந்துள்ளது. அடியேன் கையின் சிக்கியதோ இந்த முதற் பாகம் மட்டுமே.

இந்தக் கதையின் சிறப்பு என்னவெனில் டெக்சின் வரலாற்றைப் படம் போட்டுக் காட்டுவதே. டெக்சின் செவ்விந்திய மனைவி, மகன் என்று கதை நீள்கின்றது.

இதன் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களாக தணியாத தணல், காலன் தீர்த்த கணக்கு என்று தொடர்ந்திருக்கின்றன. கடைகளில் தேடியும் இன்னமும் இந்தப் பாகங்கள் கிடைக்கவில்லை.

நீண்ட நாளாக காமிக்ஸ் பதிவு இடாத காரணத்தால் இந்த சிறிய காமிக்ஸ் பதிவு ;)

கொசுறுத் தகவல்: நம் பலரும் விரும்பி வாசிக்கும் லயன் ஆசிரியர் திரு. விஜயனின் “சிங்கத்தின் சிறுவயதில்” தொடரும் இந்த இதழில்தான் ஆரம்பமாகின்றது.

posted by மயூரேசன் in காமிக்ஸ் and have Comments (3)